என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » income tax officials
நீங்கள் தேடியது "Income tax officials"
பெங்களூரு சிறையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். #ITRaids #Sasikala
பெங்களூரு:
சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங்கள், அவர்கள் உறவினர்கள் டி.டி.வி. தினகரன், விவேக் மற்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடந்தது. மொத்தம் 187 இடங்களில் நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை உதவி கமிஷனர் வீரராகவன் தலைமையில் உள்ள குழுவினர் இந்த விசாரணையை நடத்தினார்கள். இந்த விசாரணை குழுவில் ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகளும், 2 உதவியாளர்களும் இடம்பெற்று இருந்தனர்.
நேற்று காலை 10.50 மணிக்கு 9 பேர் கொண்ட குழுவினரும் சிறை வளாகத்துக்கு காரில் சென்றனர். அவர்கள் சென்ற கார் சிறை கேட் வரை அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்து 5 பைகள் மற்றும் சூட்கேஸ்களில் வைக்கப்பட்டு இருந்த ஆவணங்களை எடுத்து சென்று சசிகலாவிடம் காட்டி விசாரணை நடத்தினார்கள். 11.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது.
அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பெரும்பாலும் தெரியாது, ஞாபகம் இல்லை என்று அவர் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
சசிகலா பங்குதாரராக இருந்த நிறுவனங்கள், அவரது உறவினர்கள் தொடர்பான சொத்துக்கள், வங்கி பண இருப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு ஓட்டலில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டது. இந்த விசாரணை குழுவில் இடம்பெற்ற ஒரு அதிகாரிக்கு பெங்களூருவிலேயே வீடு இருப்பதால் அவர் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட உணவை சாப்பிட்டார்.
சசிகலாவுக்கு சாப்பிடுவதற்காக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டது. அவர் சாப்பிட்டுவிட்டு வந்தபிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இந்த விசாரணை விவரங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளும் அதற்கு சசிகலா அளித்த பதில்களும் சம்பவ இடத்திலேயே டைப் செய்யப்பட்டு அந்த பேப்பரை காட்டி சசிகலாவிடம் அதிகாரிகள் கையெழுத்து பெற்றனர்.
விசாரணை நடப்பதற்கு முன்பும், விசாரணை முடிந்த பிறகும் சிறையில் உள்ள மருத்துவர்கள் சசிகலாவுக்கு ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்தனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக சசிகலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றும் மாலை வரை விசாரணை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்க உள்ளனர். #ITRaids #Sasikala
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை நடத்தினர். #ITRaids #Sasikala
பெங்களூரு:
அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ண ப்ரியா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த சென்னை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக சிறைத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது.
அதன்படி, ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு இன்று காலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றது. அங்கு சசிகலாவிடம் விசாரணையை தொடங்கினர். இன்றும், நாளையும் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #ITRaids #Sasikala
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். இதே போல சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங்கள், அவரது உறவினர்கள் டிடிவி தினகரன், விவேக் உள்ளிட்டோரின் உறவினர்களின் வீடுகள், அவர்களுக்கு தொடர்புடைய அலுவலகங்கள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களில் 5 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துகள் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்தனர்.
அதன்படி, ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு இன்று காலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றது. அங்கு சசிகலாவிடம் விசாரணையை தொடங்கினர். இன்றும், நாளையும் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #ITRaids #Sasikala
×

X