search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in milk production"

    • மாநிலம் முழுவதும் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள்.
    • வாடிக்கையாளர்களுக்குத் தரமான பால் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    உலகளவில் அதிக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழும் வேளையில், நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில், தமிழ்நாடு 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.

    ஆவின் நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தரமான பால் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகமானது சீரான நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளில் கையொப்பமிட்ட 7 அறிவிப்புகளில் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 3 ஆண்டுகளில் பால் வளத்துறையினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 9,189 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு சுமார் 3.85 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர்.

    இதன் மூலம் தற்போது நாளொன்றுக்குச் 35.67 லட்சம் லிட்டர் பால் சங்க அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4 லட்சம் லிட்டர் பால் உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் மூலம் விற்பனை செய்தது போக, 31.67 லட்சம் லிட்டர் பால் 27 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இப்போது பால்வளத் துறையில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு சரித்திர சாதனை படைத்துள்ளது.

    ஆவின் நிறுவனத்தில் மாநிலம் முழுவதும் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார்கள்.

    ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்களை மின்ணணு வாயிலாக ரூ.590/-கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதற்காக ஆவின் நிறுவனத்திற்கு இந்திய அளவில் இரண்டாமிடத்திற்கான விருது வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×