search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indelible ink"

    தேர்தலில் வாக்குப்பதிவின்போது ரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி  விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #SatyabrataSahoo #Rajinikanth
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழன் அன்று நடந்தது.

    நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். இந்த தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களித்தபோது அவருக்கு வலதுகையில் மை வைக்கப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.

    தேர்தல் நடைமுறை விதிகளின்படி வாக்களிப்பவரின் இடது கை ஆள் காட்டி விரலில் தான் மை வைக்கப்பட வேண்டும். இடது கை விரலில் காயம் என்றாலோ மை வைக்க முடியாத சூழ்நிலை என்றாலோ அதற்கு அடுத்த விரலில் மை வைக்கப்படவேண்டும். ஒருவேளை இடது கையில் மை வைக்க முடியாதபட்சத்தில் தான் வலது கையில் மை வைக்கப்படவேண்டும்.

    ரஜினிகாந்த் வாக்களிக்கும்போது அவருக்கு மை வைத்த அலுவலர் பதற்றத்தில் அவரது வலது கையில் மை வைத்துவிட்டதாக தெரிகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நடிகர் அஜித்துக்கு ஆள்காட்டி விரலுக்கு பதிலாக நடுவிரலில் மை வைக்கப்பட்டு விட்டது.

    அதை மீடியாவுக்கு முன்னால் காட்டக்கூடாது என்று கையின் நான்கு விரல்களையும் சேர்த்து காண்பித்தார். அதுபோன்ற ஒரு தர்மசங்கடம் ரஜினிக்கும் அவருக்கு மை வைத்த அலுவலருக்கும் ஏற்பட்டுள்ளது.



    சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முன்னணி நடிகர் என்பதால் அலுவலர் பதற்றத்தில் செய்தாரா? இதற்கு எப்படி ரஜினி சம்மதித்தார்? இது விதிமீறலில் வராதா? இது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த சத்யபிரத சாகு ‘தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள், தவறுதலாக ரஜினிகாந்தின் வலது கைவிரலில் அடையாள மையை வைத்திருக்கலாம்.

    ரஜினி ஓட்டு போட வரும்போது பத்திரிகையாளர்கள் உள்பட பெருங்கூட்டம் கூடியதால் அவசரத்தில் தேர்தல் அதிகாரி இடது கைவிரலுக்கு பதில் வலது கைவிரலில் மை வைத்திருக்கலாம்.

    பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் தவறு செய்தது தொடர்பாக அறிக்கை கேட்கப்படும். மேலும், அதிக ரசிகர்களுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு ரஜினிகாந்த் வந்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அறிக்கை கேட்கப்படும்.

    அதேபோல் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பு விதியின்படி வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் அறிக்கை கேட்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #SatyabrataSahoo #Rajinikanth

    கடந்த பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து அழியாத மை பாட்டில்கள் வாங்குவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ரூ.33 கோடி செலவு செய்துள்ளது. #LSPolls #IndelibleInk
    புதுடெல்லி:

    தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை செய்து முடித்து விட்டனர் என்பதை உறுதிப்படுத்த அவர்களுக்கு அடையாள மை வைக்கப்படும்.

    வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் இந்த மை வைக்கப்படும். இது அழிக்க முடியாத மையாகும்.

    வாக்காளர், வாக்களித்து விட்டார் என்பதை குறிப்பேடு மட்டுமின்றி மீண்டும் கள்ள ஓட்டு போட முயற்சி செய்வதை கைவிரலில் வைக்கப்படும் அழியாத அடையாள மை மூலம் தடுக்க முடியும். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு, மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், வாக்காளர்களின் வலது கை ஆள் காட்டி விரலில் அழியாத மையை தேர்தல் அதிகாரிகள் வைப்பார்கள்.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 534 தொகுதிகளிலும் 21.5 லட்சம் அழியாத மை பாட்டில்கள் வாங்கி பயன்படுத்தப்பட்டன. தற்போது நாடு முழுவதும் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே கூடுதலாக அழியாத மை பாட்டில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.



    அதன்படி தற்போது 26 லட்சம் அழியாத மை பாட்டில்களை தலைமை தேர்தல் ஆணையம் வாங்கியுள்ளது. கடந்த தேர்தலை விட 4.5 லட்சம் மை பாட்டில்கள் அதிகமாகும். இந்த மை பாட்டில்கள் வாங்குவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ரூ.33 கோடி செலவு செய்துள்ளது.

    இந்த மை பாட்டில்கள் ஒவ்வொன்றிலும் பத்து மில்லி லிட்டர் அழியாத மை இருக்கும். இந்த அழியாத மையை கர்நாடகா மாநில அரசுக்கு சொந்தமான மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னீஷ் நிறுவனம் மட்டுமே தயாரித்து வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிறுவனத்தின் மை 7 கட்ட தேர்தலின்போதும் சுமார் 90 கோடி வாக்காளர்களின் கை விரல்களில் வைக்கப்பட இருக்கிறது. #LSPolls #IndelibleInk
    பாராளுமன்ற தேர்தலில் முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்கு தேவையான 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #Parliamentelection #IndelibleInk
    மைசூரு:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது. கட்சிகள் கூட்டணி, தொண்டர்கள் ஆரவாரம், தலைவர்கள் பிரசாரம், ஆட்டோக்களில் பிரசாரம், கட்சிகளின் பொதுக்கூட்டம் என நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் தேர்தலின்போது ஓட்டுப்பதிவு அன்று வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை வைக்கப்படுவது வழக்கம். இது காலம்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.



    இந்த அழியாத மை தயாரிக்கும் அரசு தொழிற்சாலை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ளது. நாடு முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுதேர்தலுக்காக 10 மில்லி லிட்டர் அளவில் 26 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்க இந்த நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்தல் கமிஷனிடம் இருந்து உத்தரவு வந்தது. உடனடியாக அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கின.

    இதற்காக இதுவரை ரூ.66 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்கு தேவையான 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  #ParliamentElection #IndelibleInk
    ×