search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Independent MP"

    • எக்ஸ் தளத்தில் சுமலதா இன்று பா.ஜனதாவில் இணைய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
    • அவருக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்து வந்தார்.

    இந்த முறை மாண்டியா தொகுதியில் பா.ஜனதா சார்பில் சுமலதா போட்டியிட விரும்பினார். ஆனால் ஜனதாதளம் (எஸ்) பா.ஜனதா கூட்டணியில் இணைந்ததால் மாண்டியா தொகுதியை பா.ஜ.க. ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஒதுக்கியது. இதையடுத்து அந்த தொகுதியில் போட்டியிடும் குமாரசாமி, நடிகை சுமலதாவை சந்தித்து ஆதரவு கேட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் சுமலதா மாண்டியாவில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தினார். இதில் பா.ஜனதாவில் இணைவதாக அறிவித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் சுமலதா இன்று (வெள்ளிக்கிழமை) பா.ஜனதாவில் இணைய போவதாக அதிகாரப்பூர்வ மாக அறிவித்தார்.

    மேலும் மாண்டியாவின் வளர்ச்சியை எனது முக்கிய மந்திரமாக வைத்துள்ளேன். நமக்கு பிடித்த பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கையில் பா.ஜனதாவை ஆதரிப்பதாக அறிவித்திருந்தேன். அதன்படி பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைகிறேன். உங்களது வாழ்த்துக்களும், ஆசிகளும் வழக்கம்போல இருக்கட்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அதன்படி நடிகை சுமலதா பா.ஜனதா மூத்த தலைவர்களை சந்தித்து இன்று பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    ×