search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Australia Tour"

    இந்திய வீரர்களுக்கான உணவு மெனுவில் மாட்டிறைச்சி வேண்டாம் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. #BCCI #AUSvIND
    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று டி20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.

    நவம்பர் 21-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரை சுமார் இரண்டு மாதம் விளையாடுகிறது. இந்த தொடர் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே இருநாட்டு கிரிக்கெட் வாரியத்திற்குமிடையில் கையெழுத்து ஆகியிருக்கும். அதில் வீரர்களுக்கான தங்குமிடும், அவர்களுக்கு செய்து கொடுக்கும் வசதிகள், சாப்பாடு மெனு போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கான உணவு மெனுவில் மாட்டிறைச்சி வேண்டாம் என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.


    கோப்புப்படம்

    இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது வீரர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கப்பட்டுள்ளது. அதை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதற்கு ரசிகர்களிடையே கடும் விமர்சனம் எழும்பியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில்தான் வீரர்களுக்கான உணவு மெனுவில் இருந்து மாட்டிறைச்சியை நீக்க கூறியதாக கூறப்படுகிறது. அதற்குப்பதில் வெஜிடேரியன் மெனுவை அதிகரித்துள்ளது.
    ×