search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india jananayaka valibar sangam"

    இளைஞர்களுக்கு வேலை கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கேட்டும் மாவட்டத் தலைவர் நாராயணன் மற்றும் ஒன்றிய செயலாளர் இளையராஜா முன்னிலையில் 60 பேர் வெள்ளைமுனியன் கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி வழியாக பஸ் நிலையத்திற்கு வந்தனர். ஊர்வலத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைகொடு, அரசாணை 56 ரத்துசெய், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

    தொடர்ந்து கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 60 பேரை கந்தர்வகோட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் மாலையில் விடுவித்தனர். 
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    அரசு மற்றும் பொதுத்துறைகளில் உள்ள காலிப்பணி இடங்களை நிரப்பிட வேண்டும். ரெயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும். அரசுப்பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை 56-ஐ ரத்துசெய்திட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தி பொருட்களை பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகள் உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பரசன், மாவட்டக்குழு உறுப்பினர் கலைச்செல்வி உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். 
    டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 9-வது மாநாடு பெரம்பலூரில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கார்த்திக், அஜய் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் பேசினார். இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லதுரை, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலையரசி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் அகஸ்டின், இந்திய ஜனநாயக சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ராஜாங்கம். முன்னாள் மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர்.

    மாநாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் பாகுபாடற்ற கல்வி, வேலையில்லா இளைஞர்களுக்கும் பாதுகாப்பான வேலை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க மருத்துவ துறையை சீர்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்.

    பெரம்பலூரில் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் வினோத் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் விஜய்குமார் நன்றி கூறினார்.
    ×