search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india republic day"

    அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

    டிரம்ப்புக்கு முன்பு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா டெல்லி வந்து இந்தியாவின் குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார். தற்போது டிரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் மூலம் அமெரிக்காவுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. பல சுற்றுக்களாக கடிதப்பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

    இந்தியாவின் அழைப்பை ஏற்பது பற்றியோ, டிரம்ப் வருகை பற்றியோ இன்னும் அமெரிக்கா அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. என்றாலும் டிரம்ப் இந்தியா வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


    டிரம்ப் அமெரிக்க அதிபரான பின்பு அவருடன் பிரதமர் மோடி நல்லுறவு வைத்திருந்தார். பல முறை அமெரிக்காவுக்கு சென்று டிரம்ப்பை சந்தித்து பேச்சு நடத்தி இருக்கிறார். வெளிநாடுகளில் பல்வேறு மாநாடுகளில் சந்தித்த போதும் இருவரும் நட்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    எனவே அதிபர் டிரம்ப் இந்தியா வருகைக்கான சாதகமான முடிவை எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. #DonaldTrump  #RepublicDay
    ×