search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian American"

    அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ருதி பழனியப்பன் தேர்வாகியுள்ளார். #SruthiPalaniappan #Harvardstudent
    நியூயார்க்:

    அமெரிக்காவின் மாஸாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள காம்பிரிட்ஜ் நகரில்  பிரசித்திபெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு பயில்வதே பெருமைக்குரிய விஷயமாக உலகில் உள்ள பலர் கருதிவரும் நிலையில் இந்த பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்ணான ஸ்ருதி பழனியப்பன்(20) 41.5 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். இதே அணியை சேர்ந்த  ஜூலியா ஹுயேஸா(20) துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.




    ஸ்ருதி பழனியப்பனின் பெற்றோர் கடந்த 1992-ம் ஆண்டு சென்னையில் இருந்து அமெரிக்காவில் சென்று குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ருதி தேர்ந்தெடிக்கப்பட்டார். #SruthiPalaniappan #Harvardstudent

    அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #DonaldTrump #USCourt #NeomiRao
    வாஷிங்டன்:

    அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.

    அமெரிக்காவில் பல பெண்களின் பாலியல் புகார்களுக்கு ஆளானவர் நீதிபதி பிரெட் கவனாக் (வயது 53). அங்கு வாஷிங்டன் மாகாணத்தில் கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர். அவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்தார். அதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்தது. அதையடுத்து அவர் கடந்த மாதம் 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார்.



    அதைத்தொடர்ந்து அவர் வகித்து வந்த வாஷிங்டன் மாகாணம், கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவி காலியானது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படுவது இந்த கோர்ட்டு ஆகும்.

    இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண்ணான நியோமி ஜகாங்கிர் ராவ் (45) என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இதுபற்றிய அறிவிப்பை வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது அவர் வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறுகையில், “கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதி பிரெட் கவனாக் இடத்துக்கு நியோமி ராவை நான் தேர்வு செய்து இருக்கிறேன். அவர் அற்புதமான மிகச்சிறப்பான நபராக இருப்பார்” என்று குறிப்பிட்டார்.

    அதைத் தொடர்ந்து நியோமி ராவ், ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். அப்போது அவர், “செல்வாக்கு மிக்க அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு என்னை தேர்வு செய்திருப்பதின் மூலம் என் மீது ஜனாதிபதி வைத்துள்ள நம்பிக்கையை காட்டி உள்ளார். அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்” என குறிப்பிட்டார்.

    நியோமி ராவ் தேர்வு பற்றிய அறிவிப்பை டிரம்ப் வெளியிட்ட தீபாவளி கொண்டாட்டத்தில், இந்திய தூதர் நவ்தேஜ் சிங் சர்னா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    நியோமி ராவ் தேர்வுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும். அந்த சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், நியோமி ராவ் தேர்வுக்கு ஒப்புதல் கிடைப்பது உறுதி.

    நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ள கோர்ட்டில் இந்தியரான சீனிவாசன் ஏற்கனவே நீதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நியோமி ராவ், இந்தியாவை சேர்ந்த பார்சி இன பெற்றோரான ஜகாங்கிர் நாரியோஷாங் ராவ், ஜெரின் ராவ் தம்பதியரின் மகளாக 1973-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ந் தேதி பிறந்தவர். மிச்சிகனில் வளர்ந்தார். டெட்ராய்டு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புகழ்பெற்ற ஏல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து மிகச்சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் படித்து சட்டத்தில் பட்டம் பெற்றார்.

    சிறிது காலம் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

    கடந்த ஆண்டு இவரை ஜனாதிபதி டிரம்ப், தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் அலுவலகத்தின் நிர்வாகியாக நியமித்தார்.

    இவர் அமெரிக்காவில் ஆலன் லெப்கோவிட்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  #DonaldTrump #USCourt #NeomiRao 
    அமெரிக்க நாட்டில் மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் சாட்டர்ஜியை நியமனம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #DonaldTrump #IndianAmerican #CoalSubsidy #NeilChatterjee
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பெர்க் என்னும் மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக கெவின் மேக்கின்டயர் என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி உடல்நல குறைவால் பதவி விலகினார்.

    இந்த நிலையில், மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் சாட்டர்ஜியை நியமனம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



    நீல் சாட்டர்ஜி இதுவரை அந்த ஆணையத்தின் கமிஷனர்களில் ஒருவராக இருந்து வந்தார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 10-ந் தேதி முதல் டிசம்பர் 7-ந் தேதி வரை மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவியை தற்காலிகமாக வகித்துள்ளார்.

    இவர் நாடாளுமன்ற செனட் சபையின் ஆளுங்கட்சி எரிசக்தி கொள்கை ஆலோசகராகவும் இருந்து வந்தார். அமெரிக்காவில் எரிசக்தி, நெடுஞ்சாலை, பண்ணை சட்டத்தை நிறைவேற்றியதில் முக்கிய பங்கும் வகித்துள்ளார்.

    நீல் சாட்டர்ஜியின் பெற்றோர், 50 ஆண்டுகளுக்கு முன்பாக கொல்கத்தாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீல் சாட்டர்ஜி, அமெரிக்காவின் செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும், சின்சினாட்டி பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் படித்து சட்ட பட்டமும் பெற்றுள்ளார். 
    அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் கவர்னர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய கம்யூட்டர் என்ஜினீயர் போட்டியிட உள்ளார். #CaliforniaGovernor
    கலிபோர்னியா:

    உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் கோயல் (22). இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிகிறார்.

    கலிபோர்னியாவில் கவர்னராக இருந்த ஜெர்ரி பிரவுனின் பதவிக்காலம் முடிகிறது. எனவே அங்கு புதிய கவர்னரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுகிறது.

    அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இவர் போட்டியிடுகிறார். இவர் மெகாபோனை கையில் ஏந்தியபடி கலிபோர்னியா மாகாணத்தின் நகர வீதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இவரது பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. நான் கவர்னரானால் லஞ்சத்தை ஒழிப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார். கலிபோர்னியாவில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். இம்மாகாணத்தில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவர்கள் இவர்கள் தான். எனவே இத்தேர்தலில் சுபம்கோயலுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.

    இவரது தந்தை விபுல் கோயல் இவர் லக்னோவில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். தாயார் கருணாகோயல் இவர் மீரட்டை சேர்ந்தவர். #CaliforniaGovernor
    ×