என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Indian women's hockey team"
- ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் மட்டும் இருக்கும் போது ஸ்பெயின் கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- போட்டி முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
ஆம்ஸ்டெல்வீன்:
15-வது பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, மூன்று லீக் ஆட்டத்தில் ஒரு தோல்வி, 2 டிரா பெற்றது. இதனால் இரண்டு புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 3-வது இடத்தை பிடித்தது.
போட்டி விதியின்படி கால் இறுதிக்கு முன்னேற இந்திய அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். அதன்படி 'சி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஸ்பெயின் அணியுடன் நேற்று இந்தியா மோதியது. இதில் வெற்றி பெறும் அணி கால் இறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின.
ஆனால் தொடக்கத்தலேயே கோல் அடிக்க முடியவில்லை. கடைசி கட்டத்தில் ஸ்பெயின் கோல் அடித்தது.
ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் மட்டும் இருக்கும் போது ஸ்பெயின் கோல் அடித்து முன்னிலை பெற்றது.
போட்டி முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி போட்டித்தொடரில் இருந்து வெளியேறியது.
கால் இறுதிக்கு நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
- காயத்தில் இருந்து முழுமையாக மீளாத முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் பெயர் அணி தேர்வில் மீண்டும் பரிசீலிக்கப்படவில்லை.
- கோல்கீப்பர் பிச்சுதேவி கரிபாம், நடுகள வீராங்கனை சோனிகா ஆகியோர் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்து, கனடா, வேல்ஸ், கானா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜூலை 29-ந் தேதி கானாவை சந்திக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள பெரும்பாலானவர்கள் அப்படியே தொடருகிறார்கள்.
கோல்கீப்பர் பிச்சுதேவி கரிபாம், நடுகள வீராங்கனை சோனிகா ஆகியோர் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர். கோல்கீப்பர் சவிதா கேப்டனாகவும், பின்கள வீராங்கனை தீப் கிரேஸ் எக்கா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து முழுமையாக மீளாத முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் பெயர் அணி தேர்வில் மீண்டும் பரிசீலிக்கப்படவில்லை.
இந்திய அணி வருமாறு:-
சவிதா (கேப்டன்), ரஜனி எதிமர்பு (கோல்கீப்பர்கள்), தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா (பின்களம்), நிஷா, சுஷிலா சானு, மோனிகா, நேஹா, ஜோதி, நவ்ஜோத் கவுர், சலிமா டெடி (நடுகளம்), வந்தனா கட்டாரியா, லாம்ரெம்சியாமி, நவ்னீத் கவுர், ஷர்மிளா தேவி, சங்கீதா குமாரி (முன்களம்).
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்