என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Indian Wrestling Federation"
- ஜனவரி, மே மாதங்களிலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
- 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு மே.30-ல் கடிதம் எழுதி இருந்தது.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷ் சிங் பணியாற்றினார். அவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட் டது. இதற்காக பூபிந்தர்சிங் பஜ்வா தலைமையில் தற்காலிக குழுவை கடந்த ஏப்ரல் 27-ந்தேதி இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பஞ்சாப் ஐகோர்ட்டு தேர்தலை நிறுத்தி வைத்தது. வருகிற 28-ந்தேதி வரை தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த கூட்டமைப்பு தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.காலவரையற்ற சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினர் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தது. ஆனாலும் குறிப்பிட்ட தேதியில் தேர்தலை நடத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சஸ்பெண்டு காரணமாக இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் தேசிய கொடியின்கீழ் பங்கேற்க முடியாது.
செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கும் ஒலிம்பிக் தகுதி போட்டியான உலக சாம்பியன்ஷிப்புக்கு இந்திய மல்யுத்த வீரர்கள் நடுநிலை வீரர்களாக பங்கேற்பார்கள்.