search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indiansdead"

    நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பான, 15 லட்சம் நேரலை வீடியோக்களை, 24 மணி நேரத்தில் பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. #FacebookRemoved #MosqueShootingvideo #NewZealandShooting
    வாஷிங்டன்:

    நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளி  தன்னை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த "பிரெண்டன் டாரன்ட்" என்று டுவிட்டரில் அடையாளம் காட்டினான். அத்துடன், 73 பக்கத்தில் தனது நோக்கங்களை தெரிவித்து இருந்தான்.

    மேலும் ஆன்லைன் கேம்களில் வருவதைப் போல டாரன்ட், துப்பாக்கியினால் மக்களை கொன்று குவித்த வீடியோவினை நேரலையாக வெளியிட்டிருந்தான். இதனை கண்ட உலகின் பல்வேறு நாடுகளின் அரசும், மக்களும் கொதித்தெழுந்து, கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த இரக்கமற்ற செயல் அரங்கேறிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த வீடியோவின் எவ்வித பகிர்வும் சட்டத்திற்கு எதிரான மிகப்பெரிய வன்முறை என்றும், அதனை பேஸ்புக் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசினா ஆர்டர்ன் உத்தரவிட்டார். அதன்படி சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோக்கள் நீக்கப்பட்டன.

     மியா கார்லிக்

    இதையடுத்து பேஸ்புக் நிறுவனத்தின் நியூசிலாந்து செய்தி தொடர்பாளர் மியா கார்லிக் கூறியதாவது:

    இந்த வீடியோ, இணையப்பக்கத்தில் பகிரப்படுவதை தடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென தனியாக ஒரு குழு, சிறந்த தொழில்நுட்பத்துடன் முழுவதும் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் 1.5 மில்லியன்(15 லட்சம்) வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன.  மேலும் பேஸ்புக் ஊழியர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்.  

    இவ்வாறு அவர் கூறினார். #FacebookRemoved #MosqueShootingvideo #NewZealandShooting

    நியூசிலாந்தின் மசூதிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். இச்சம்பவத்தின் போது 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. #MosqueShooting #NewZealandShooting #IndiansDead
    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து இந்திய தூதர் சஞ்சீவ் கோலி கடந்த மார்ச் 16ம் தேதி,  தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்து  கிடைத்த தகவல்களின் படி, இந்தியா மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் மாயமானதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது.



    மனிதர்களுக்கு எதிராக மாபெரும் குற்றம் அரங்கேறியுள்ளது. நாங்கள் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து பிரார்த்திக்கிறோம்’ என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பர்ஹாஜ் அஷான், கரீம்நகரைச் சேர்ந்த முகமது இம்ரான் கான், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒசைர் காதர் உட்பட 8 இந்தியர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அகமது இக்பால் ஜகாங்கீர் என்பவர் படுகாயமுற்றார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இதில் ஒசைர் காதர்(25) நியூசிலாந்தின் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #MosqueShooting #NewZealandShooting #IndiansDead
    ×