என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » injured iaf
நீங்கள் தேடியது "injured iaf"
ரத்த காயங்களுடன் பிடிபட்ட சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை வீரரின் வீடியோவை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. #IndiaobjectsPakistan #injuredIAFpersonnel #Abhinandan #BringBackAbhinandan
புதுடெல்லி:
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை இன்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது.
மேலும், சென்னையை சேர்ந்த விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமான் என்பவர் தனது பெயர், வயது, பதவி மற்றும் மதம் ஆகியவை தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வீடியோ காட்சியை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் அபினந்தன் முகத்தில் ரத்த காயங்களுடன் காணப்படுகிறார்.
இதுதவிர, பாகிஸ்தானில் உள்ள சிலர் அபினந்தன் காட்டருவியில் விழுந்து கிடந்த நிலையில் அவர் கைது செய்யப்படும் காட்சி, படுத்த நிலையில் அவர் பலவந்தமாக இழுத்துச் செல்லப்படும்காட்சி, அவரை சில அதிகாரிகள் மாறிமாறி முகத்தில் தாக்கப்படும் காட்சி மற்றும் முகத்தில் ரத்த காயங்களுடன் அபினந்தன் தோன்றும் காட்சி ஆகிய காட்சிகள் கொண்ட சில வீடியோக்களை சமூக வலைத்தளத்தங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை இன்று மாலை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காயமடைந்த இந்திய விமானப்படை வீரரின் படங்களை மோசமான வகையில் காட்சிப்படுத்துதல் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அனைத்து விதிமுறைகள் மற்றும் ஜெனிவா உடன்படிக்கையில் உள்ள ஷரத்துகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக பாகிஸ்தானிடம் இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானப்படை வீரர் அபினந்தனுக்கு எந்தவித தீங்கும் ஏற்பட கூடாது. அவர் விரைவில் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் இந்த நிலையில் செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. #IndiaobjectsPakistan #injuredIAFpersonnel #Abhinandan #BringBackAbhinandan
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X