search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inquiry case"

    பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19-ந் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #Sasikala #TTVDinakaran
    சென்னை:

    கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டனர். அதன்பின்பு, அவர்கள் ஒன்று சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. (அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள்) சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    இதில், அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுச்செயலாளர் என்ற பதவியும் நீக்கப்பட்டது.



    இதை எதிர்த்தும், தீர்மானங்களை ரத்து செய்யக்கோரியும் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை தாக்கல் செய்தபோது செயல்பட்டு வந்த புரட்சித்தலைவி அம்மா அணி, அம்மா அணி என்ற அணிகள் தற்போது இல்லை என்பதால் தங்களது மனுவில் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #Sasikala #TTVDinakaran
    ×