search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inspection work"

    • யார் யார் வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கிறது என்ற விவரம் மின் வாரியத்திலும் உள்ளது.
    • 2-க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி 100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் தொழிற்சாலை வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளன.

    இதில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் வருகிறார்கள். 2 மாதத்துக்கு ஒருமுறை மின்சார ரீடிங் எடுக்கும் போது பல வீடுகளுக்கு அதிக மின் கட்டணம் வந்து விடுகிறது.

    இதனால் 100 யூனிட் இலவச மின்சாரம் கூடுதலாக கிடைக்க வேண் டும் என்பதற்காக ஒரே வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதை கண்டறிவதற்காக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் யார் யார் வீட்டில் 2-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக் கிறது என்ற விவரம் மின் வாரியத்திலும் உள்ளது.

    தற்போது மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக பெறுகிறார்களோ அதை கண்டறிந்து நிறுத்துவதற்கு தற்போது வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

    ஒருவருக்கு வெவ்வேறு முகவரியில் பல வீடுகள் இருந்தால் அந்த வீடுகளுக்கு 100 யூனிட் மானியம் கிடைக்கும். ஆனால் ஒரே வீட்டில் 2 மின் இணைப்புகளை பெற்றிருந்தால் அதை ஒரே மீட்டராக கணக்கில் கொண்டு வருவதற்கு ஏற் பாடுகள் நடைபெற்று வருகிறது.

    மின் நுகர்வோர் இதை செய்ய தவறினால் மின் வாரியம் பொது பயன்பாடு கட்டணமாக யூனிட்க்கு 8 ரூபாய் கணக்கில் வசூலிக்க தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக இருக்கும் பட்சத்தில் தனித்தனி பெயரில் மின் இணைப்பு இருந்தால் அதற்கு 100 யூனிட் கிடைக்கும். ஆனால் அந்த வீட்டில் ஒருவர் பெயரில் 2-க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி 100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும். இதற்காக தான் இப்போது வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி மின் வாரிய ஊழியர்களால் நடத்தப்படுகிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

    ×