search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspector transfer"

    கஞ்சா வாங்க போலீசாருக்கு உத்தரவிட்டு வியாபாரியுடன் தொடர்பில் இருந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் நெல்லை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் சர்க்கரைபட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 39)., காட்டு ராஜா (35), கஞ்சா வியாபாரிகள். இதில் காட்டு ராஜா மீது வழக்கு பதிவு செய்ய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் ஈஸ்வரனிடம் போலீஸ்காரர்கள் ராஜா, வாலிராஜன், ஸ்ரீதர் ஆகியோர் 1.5 கிலோ கஞ்சாவை வாங்கி போலீஸ்காரர் ராஜா வீட்டில் பதுக்கி வைத்தனர்.

    இது குறித்து தனிப்படை இன்ஸ்பெக்டர் கண்ணன் புகாரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் விசாரித்து ராஜேஷ் கண்ணனை கட்டுப்பாட்டு அறைக்கும், 3 போலீசாரை ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டனர்.

    இந்த நிலையில் கஞ்சா வாங்க போலீசாருக்கு உத்தரவிட்டு வியாபாரியுடன் தொடர்பில் இருந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் நெல்லை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    பொள்ளாச்சி அருகே திருவிழாவின் போது தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு மொட்டை அடித்த இன்ஸ்பெக்டர் போலீஸ் பயிற்சி கேம்ப்க்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கோவை பொள்ளாள்சி அருகே உள்ளது மீனாட்சிபுரம். இங்குள்ள கேரள மாநிலம் நெடும்பாறையை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 18), நிதிஷ் (20). இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை அருகில் நடந்த கோவில் விழாவுக்கு சென்றனர்.

    அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பானது. இதை கவனித்த மீனாட்சிபுரம் இன்ஸ்பெக்டர் வினோத் வாலிபர்களை பிடித்து கண்டித்தார். இது தவிர அவர்களை ஜீப்பில் ஏற்றி அருகில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்துக்சென்று மொட்டை அடிக்கும்படி கடைக்காரருக்கு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டரின் மிரட்டலுக்கு பயந்த வாலிபர்கள் எதுவும் பேசாமல் இருந்தனர்.

    இன்ஸ்பெக்டர் வினோத் சென்றதும் வாலிபர்கள் பாலக்காடு போலீஸ் சூப்பிரண்டு தேபெஸ்குமார் பெகராவிடம் புகார் அளித்தனர். இது குறித்து உடனே விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டி.எஸ்.பி. விஜயகுமாருக்கு உத்தரவிட்டார்.

    உடனடியாக வாலிபர்களை வலுக்கட்டாயமாக மொட்டை அடித்த இன்ஸ்பெக்டர் வினோத் போலீஸ் பயிற்சி கேம்ப்க்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கூறும்போது, இன்ஸ்பெக்டர் அத்துமீறி நடந்தது சட்டவிரோதம் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று கூறினர். #tamilnews
    ×