search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Interceptor 650"

    ராயல் என்ஃபீல்டு நிறுவன ஒரே மாதத்தில் 2000 650 ட்வின் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650 ட்வின் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் ஒரே மாதத்தில் 2000 யூனிட்களை கடந்துள்ளது. மார்ச் 2019 இல் ராயல் என்ஃபீல்டு 1700 யூனிட்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனையில் சரிவை சந்தித்து வந்தது. ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களில் 648 சி.சி. ட்வின்-சிலிண்டர் ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர் @7250 ஆர்.பி.எம். மற்றும் 52 என்.எம். டார்க் @5250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் உடன் வருகிறது. ஸ்லிப்பர் கிளட்ச் கொண்டு அறிமுகமாகி இருக்கும் முதல் ராயல் என்ஃபீல்டு மாடல்களாக 650 ட்வின் மாடல்கள் இருக்கின்றன.



    பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320 எம்.எம். ட்வின் பிஸ்டன் பைபர் கேலிப்பர் டிஸ்க்களும், புன்புறம் 240 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரு மோட்டார்சைக்கிள்களிலும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறம் 41 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க்களும், பின்புறம் டூயல் சஸ்பென்ஷனும் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் இன்டர்செப்டார் 650 மாடல் - மார்க் த்ரீ, க்ளிட்டர் மற்றும் டஸ்ட், ஆரஞ்சு கிரஷ், ரேவிஷிங் ரெட், சில்வர் ஸ்பெக்டர் மற்றும் பேக்கர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கான்டினென்ட்டல் ஜி.டி. 650 மாடல் - டாக்டர் மேஹெம், ஐஸ் குவீன், வென்ச்சுரா புளு, மிஸ்டர் கிரீன் மற்றும் பிளாக் மேஜிக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650 ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் 1000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. #RoyalEnfield #RoyalEnfield650Twins



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 650 ட்வின்: இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் விற்பனையில் 1000 யூனிட்களை கடந்துள்ளது. இந்தியாவில் இரு மோட்டார்சைக்கிள்களும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்தியாவில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் விலை முறையே ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.2.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ் அந்நிறுவனத்தின் அதிநவீன பேரலெல்-ட்வின் மோட்டார்சைக்கிள்கள் ஆகும்.

    புதிய 650 சிசி ராயல் என்ஃபீல்டு வாகனங்களுக்கான முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் புதிய மோட்டார்சைக்கிள்களை வாங்க மூன்று மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், சமீபத்தில் வெளியான தகவல்களில் அந்நிறுவனம் உற்பத்தி பணிகளை வேகப்படுத்தி இருப்பதாக தெரிவித்தது. 



    புதிய ராயல் என்ஃபீல்டு ட்வின் மோட்டார்சைக்கிள்களில் அதிநவீன கிளாசிக் தோற்றம் கொண்டிருக்கிறது. கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலில் ரேசர் தீம், இன்டர்செப்டர் 650 மாடலில் ஸ்கிராம்ப்ளர் வடிவம் கொண்ட கிளாசிக் தோற்றம் கொண்டிருக்கிறது. இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் 60களில் பிரபலமான இன்டர்செப்டார் மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

    ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலில் கஃபே ரேசர் வடிவமைப்பு கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு 1950களில் பிரபலமாக இருந்த கான்டினென்டல் ஜி.டி. 250 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

    ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்களில் 649சிசி ஏர்/ஆயில்-கூல்டு பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 52என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் வெளியானது. #RoyalEnfieldTwins



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் துவக்க விலை முறையே ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.2.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ராயல் என்ஃபீல்டு ட்வின் மோட்டார்சைக்கிள்களில் அதிநவீன கிளாசிக் தோற்றம் கொண்டிருக்கிறது. கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலில் ரேசர் தீம், இன்டர்செப்டர் 650 மாடலில் ஸ்கிராம்ப்ளர் வடிவம் கொண்ட கிளாசிக் தோற்றம் கொண்டிருக்கிறது. இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் 60களில் பிரபலமான இன்டர்செப்டார் மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

    ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலில் கஃபே ரேசர் வடிவமைப்பு கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு 1950களில் பிரபலமாக இருந்த கான்டினென்டல் ஜி.டி. 250 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

    ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்களில் 649சிசி ஏர்/ஆயில்-கூல்டு பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 52என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.



    புதிய ராயல் என்ஃபீல்டு ட்வின் மாடல்களின் முன்பதிவு இந்தியா முழுக்க துவங்கி இருக்கிறது. அதன்படி புதிய மோட்டார்சைக்கிள்களை முன்பதிவு செய்ய ரூ.5000 முன்பதிவு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் 41எம்.எம். டெலிஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க், 110 எம்.எம். டிராவெல் மற்றும் ட்வின் காயில்-கவர் ஷாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் 18-இன்ச் 36-ஸ்போக் அலுமினியம் அலாய் வீல்கள், பைரெலி ஃபேன்டம் ஸ்போர்ட்காம்ப் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களில் முன்புறம் 320 எம்.எம்., பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650: மார்க் த்ரீ, கிளிட்டர் & டஸ்ட், ஆரஞ்சு கிரஷ், ரேவிஷிங் ரெட், சில்வர் ஸ்பெக்டர் மற்றும் பேக்கர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

    இதேபோன்று ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. 650: பிளாக் மேஜிக், வென்ச்சுரா புளு, மிஸ்டர் கிளீன், டாக்டர் மேஹெம் மற்றும் ஐஸ் குவீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. #RoyalEnfieldTwins #Interceptor650 #ContinentalGT650
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 650சிசி மோட்டார்சைக்கிள்களின் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #RoyalEnfield #motorcycle



    இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650சிசி மோட்டார்சைக்கிள்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய 650சிசி மோட்டார்சைக்கிள்கள் இந்திய விலை ரூ.4 லட்சம் (ஆன்-ரோடு) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. 650 மற்றும் இன்டர்செப்டார் மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 14ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவற்றின் முன்பதிவுகள் அறிமுக தினத்தன்று துவங்கி, விநியோகம் ஜனவரி 2019 வாக்கில் துவங்கும் என தெரிகிறது. ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவு கட்டணம் ரூ.5,000 என நிர்ணயம் செய்யப்படுகிறது.

    விலையை பொருத்த வரை இன்டர்செப்டார் மாடலுக்கு ரூ.4 லட்சம் என்றும் இதன் வரி மற்றும் இதர கட்டணங்கள் இல்லாமல் ரூ.3.25 லட்சம் ஆகும். ராயல் என்ஃபீல்டு ஜி.டி. 650 எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்படலாம். இரண்டு மாடல்களும் பழங்கால வடிவமைப்பு மற்றும் விலை குறைந்த பேரலெல்-ட்வின் மாடல்களாக இருக்கும்.



    ராயல் என்ஃபீல்டு 650சிசி ட்வின் மாடல்கள் ஏற்கனவே சரவ்தேச சந்தையில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்டர்செப்டார் 650 மாடல் ஐரோப்பாவில் 6200 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.5.16 லட்சம்) என்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலின் விலை 6400 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.5.33 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜி.டி. மாடல்களில் 649சிசி பேரலெல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 52 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பிடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் (ஸ்டான்டர்டு ஆப்ஷன்) வழங்கப்படுகிறது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #interceptor650



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், இதன் முன்பதிவுகள் துவங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் துவங்காத நிலையில், சில விற்பனையாளர்கள் மட்டும் புதிய இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ.5,000 கட்டணத்துடன் முன்பதிவு செய்வதாக கூறப்படுகிறது.

    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் மிலன் நகரில் 2017-நவம்பர் மாதம் நடைபெற்ற EICMA மோட்டார்விழாவில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகமாகின.



    சமீபத்தில் சென்னை அருகே இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்பட்டது. இங்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்பு ஆலைகள் அமைந்திருக்கின்றது. இவை மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பு நிறைவுற்று சோதனை செய்யப்படுவதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

    இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களில் 4-ஸ்டிரோக், சிங்கிள் ஓவர்-ஹெட் கேம், ஏர்-கூல்டு 648சிசி பேரலெல்-ட்வின் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த இன்ஜின் ராயல் என்ஃபீல்டு ப்ரிட்டன் மற்றும் சென்னை குழுவினர் இணைந்து உருவாக்கியுள்ளனர். புதிய இன்ஜின்கள் 47 பி.ஹெச்.பி. பவர், 52 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு தகவல்கள் வெளியாகியுள்ளன. #royalenfield #continentalgt
    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் தீபாவளி சமயத்தில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X மற்றும் 500X மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

    புதிய தண்டர்பேர்டு மாடல்களை தொடர்ந்து இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் மாத வாக்கில் முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் 650சிசி ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.


    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் மிலன் நகரில் 2017-நவம்பர் மாதம் நடைபெற்ற EICMA மோட்டார் விழாவில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகமாகின.

    ஏற்கனவே சென்னை அருகே இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்பட்டது. இங்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்பு ஆலைகள் அமைந்திருக்கின்றது. இவை மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பு நிறைவுற்று சோதனை செய்யப்படுவதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

    இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களில் 4-ஸ்டிரோக், சிங்கிள் ஓவர்-ஹெட் கேம், ஏர்-கூல்டு 648சிசி பேரலெல்-ட்வின் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ராயல் என்ஃபீல்டு ப்ரிட்டன் மற்றும் சென்னை குழுவினர் இணைந்து உருவாக்கியுள்ளனர். புதிய இன்ஜின்கள் 47 பி.ஹெச்.பி. பவர், 52 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. #royalenfield #continentalgt
    ×