search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interesting"

    • பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

    அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் என இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு அடுதடுத்து சுவாரஸ்யமான விஷயங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     

    மேலும், இன்று அதிகாலை அவர் நடத்தி வரும் பிளாகில் எழுதி பதிவிட்ட அவர், இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு அவர் தெரிவித்துள்ள காரணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, அவரது பதிவில், 'ஒருவழியாக உற்சாகமும், அச்சமும் நிறைந்த இந்த போட்டி நிறைவடைத்துவிட்டது. இந்த போட்டியை நான் டிவியில் பார்க்கவில்லை. நான் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதாலேயே பார்க்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

     

    இதோபோல எக்ஸ் தளத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தான் போட்டியை பார்த்தால் இந்தியா தோற்றுவித்திடும் என்பதால் நான் போட்டியை பார்க்காமல் தியாகம் செய்தேன் நான் என்ன செய்யட்டும் சுந்தர் என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, போட்டியை பார்க்காததற்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×