search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intermediate Science Exam"

    மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கல்பனா குமாரி பீகார் மாநில பள்ளி இறுதி ஆண்டு தேர்விலும் சாதனை படைத்துள்ளார். #NEETTopperKalpana
    பாட்னா:

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. சார்பில் ‘நீட்’ தேர்வு கடந்த மே மாதம் 6-ந்தேதி நடந்தது. இதில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு கடந்த 4-ம் தேதி வெளியானது.

    இந்த தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேசிய அளவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். அவர் 720-க்கு 691 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

    இந்நிலையில், பீகார் மாநில பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இன்று இன்ட்டர்மிடியேட் (பள்ளி இறுதி ஆண்டு) தேர்விலும் சாதனை படைத்துள்ளார்.

    விருப்பப் பாடமாக அறிவியல், கலை மற்றும் வணிகவியலை தேர்வு செய்து படித்த கல்பனா குமாரி, இந்த ஆண்டுக்கான இறுதித்தேர்வில் 500-க்கு 434 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவி என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #NEETTopperKalpana  
    ×