search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "internal party elections"

    • தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.
    • ஆலோசனை கூட்டத்தில் கரூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் பேராசிரியர் ரெங்கநாதன் போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார்.

    கரூர் :

    தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கரூர் மாவட்டம் குளித்தலை நகர அலுவலகத்தில் நடந்த உள்கட்சி தேர்தல் தொடர்பான கூட்டத்தில் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அழகாபுரம் மோகன்ராஜ், கரூர் தேர்தல் பொறுப்பாளர் பாக்கிய செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கரூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் பேராசிரியர் ரெங்கநாதன் போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் வலையபட்டி தாமேதரன், நகர செயலாளர் எம்.விஜயகுமார்,

    மருதூர் நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மாணவரனி பாரதிநகர் வடிவேல் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×