என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "international volunteer board"
சென்னை:
சென்னை போயஸ் கார்டனில் மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லம் அமைந்துள்ளது. அங்கு பத்திரிகை, ஆன்மிகம், கல்வி, விளையாட்டு மற்றும் பொதுச்சேவைகளில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் செய்த சாதனைகள் மற்றும் சேவைகளை பிரதிபலிக்கும் புகைப்பட கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்த நினைவு இல்லத்துக்கு நாள் தோறும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பலர் வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அஞ்சலி செலுத்துவதுடன் புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டுச் செல்கிறார்கள்.
இன்று போயஸ் கார்டனில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்துக்கு சர்வதேச கைப்பந்து கழக செயல் துணைத் தலைவர் ஈசா ஹம்சா குவைத்தில் இருந்து வருகை தந்தார்.
அவர் நினைவு இல்லத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அங்கு சிறிது நேரம் மவுனம் கடைப்பிடித்தார்.
தொடர்ந்து நினைவு இல்லத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் புகைப்பட கண்காட்சியை ஈசா ஹம்சா பார்வையிட்டார்.
புகைப்பட கண்காட்சியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார். தினத்தந்தி பத்திரிகை பணியில் பல்வேறு சாதனை படைத்தது, பத்மஸ்ரீ பட்டம் பெற்றது, ஒலிம்பிக் ஆசிய போட்டிகளில் பெற்ற விருதுகள், பதக்கங்கள் மற்றும் அவை தொடர்பான புகைப்படங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தென்காசி கோவில் ராஜகோபுரம் கட்டியது தொடர்பான புகைப்படங்கள், ஆதித்தனார் கல்லூரி பட்டமளிப்பு விழா, தினத்தந்தியின் 50 ஆண்டு சாதனை தொடர்பான புகைப் படங்கள், வெளி நாட்டு சுற்றுப் பயண ஆல்பம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
30 நிமிடங்கள் வரை நினைவு இல்லத்தில் இருந்த ஈசா ஹம்சா, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருடனான தனது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து கண்ணீர் மல்க அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். #DrSivanthiAditanarMemorial