என் மலர்
நீங்கள் தேடியது "investigation"
- டாக்டர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.
- மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பண்டாரு மகந்த். தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.
இந்தநிலையில் அவரை மர்ம நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.
இதை உண்மை என்று நம்பிய அவர் ரூ.32 லட்சத்து 92 ஆயிரத்தை முதலீடு செய் தார். இதன்மூலம் கிடைத்த லாபம் மற்றும் முதலீடு செய்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார்.
ஆனால் அது முடியவில்லை. அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
மேலும் அவரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர் டெல்லி போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார்.
சிறுமிகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பார்த்ததாகவும், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.
அதை நம்பி அவரும் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். அதன்பின்னரே அவர் ஒட்டுமொத்தமாக ரூ.48 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செஞ்சி அருகே கடைக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் திடீர் மாயமானார்.
- கடைவீதிக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவன் மீண்டும் விடு திரும்பவில்லை.
விழுப்புரம்:
செஞ்சி அருகே அனந்தபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். அவரது மகன் சூர்யா (வயது 15).அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மன்தினம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தவன் மாலையில் கடைவீதிக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவன் மீண்டும் விடு திரும்ப வில்லை.அதிர்ச்சி அடைந்த மோகன் தனது மகனை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மோகன் கிடைக்கவில்லை. இது குறித்து மோகன் அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சூர்யா என்ன ஆனார், எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுவாமிமலையில் இருந்து பாபநாசம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
- பிரேக் பிடிக்காததால் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதியது.
நீடாமங்கலம்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் சாகிர் உசேன்.
இவரது மகன் அப்துல் ரஜும் (வயது 20). இவர் சம்பவத்தன்று இரவு சுவாமிமலையில் இருந்து பாபநாசம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, உத்தாணி அருகே சென்ற போது சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. லாரி நிற்பதை கண்டு அப்துல் ரஜும் பிரேக் அடிக்க முயற்சி செய்துள்ளார்.
பிரேக் பிடிக்காததால் லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதியது.
இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கரூரை சேர்ந்த மணிவண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கல்லூரியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
- கணினி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்பாக்கம் பகுதியில் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கல்லூரியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். கல்லூரிக்கு அய்ய ந்தோப்பு பகுதியை சேர்ந்த பரந்தாமன் என்பவரும், அம்மணம்பாக்கம் ஏழுமலை என்பவரும் காவலாளியாக இருந்து ள்ளனர்.
இந்நிலையில் கணினி அறிவியல் துறை துணைத்தலைவர் பிரசன்னா, விரிவுரையாளர் முருகன் ஆகியோர் கணினி அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த கணினி பொருட்கள் மற்றும் இரண்டு சிஸ்டம் பேட்டரி ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ரோசணை காவல்து றையினர் அரசு கல்லூரி அறையின் பூட்டை உடைத்து கணினி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 7 பேர் மாயமாகினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்தவர் மாடாத்தி அம்மாள். இவரது மகள் பிரியலட்சுமி (வயது 19). சிவகாசியில் உள்ள அரசு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகனுடன் மாயம்
சாத்தூர் வெங்கடாசல புரத்தைச் சேர்ந்தவர் வீரகுமார். இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு தர்ஜித் (5) என்ற மகன் உள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா அணிந்திருந்த 5 ½ பவுன் நகை மாயமானது. இதுகுறித்து வீரகுமார் மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த பிரியா தனது மகனுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை தேடி வருகின்றனர்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள தேக்கங்குளத்தைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகன் நித்தின் (16). இவர் காரியாபட்டியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். சம்பவத்தன்று நித்தின் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி
சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியைச் சேர்ந்தவர் பத்திரகாளி. இவரது மகள் ராஜரா ஜேஸ்வரி. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி ரிசர்வ்லைனைச் சேர்ந்தவர் கதிரேஷ். எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லீமா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி மனைவி செல்போனில் பேசுவதை கதிரேஷ் கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த லீமா மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாத்தூர் முத்தண்டியா புரத்தைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் ஈஸ்வரபாண்டி (17). தீபாவளி மறுநாள் வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இது குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரித்து வரு கின்றனர்.
- தன்னுடைய வீட்டில் அாிசி பையில் தனது நகைகளை வைத்திருந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதாக்கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர்.
இவரது மனைவி ஜெசிந்தா (வயது 49). இவர் தன்னுடைய வீட்டில் அாிசி பையில் தனது நகைகளை வைத்திருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் அரிசி பையில் வைத்திருந்த நகையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் நகையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அவர் 14 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டதாக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 14 பவுன் நகையை யாரும் திருடி சென்று விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகாராஜபுரம் வயல்வெளியில் ஐயப்பன் என்பவர் வலை வைத்து 6 மடையான் பறவைகளை பிடித்தார்.
- போலீசார் விசாரணை செய்து வழக்குபதிவு செய்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மகாராஜபுரம் பகுதியில் திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வனஉயிரின காப்பாளர் (கூடுதல் பொ) தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோர் உத்தரவின் பேரில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வனவர் ராமதாஸ், மகாலெட்சுமி, வேட்டை தடுப்பு காவலர்கள் லோகநாதன், நவநீத கிருஷ்ணன், பாண்டியன் குழுவினருடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மகாராஜபுரம் வயல்வெளியில் வலை வைத்து 6 மடையான் பறவைகள் பிடித்த தலைக்காடு பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 40) என்பவரை பறவைகள் மற்றும் வலைகளுடன் பிடித்து விசாரணை செய்து வழக்குபதிவு செய்யப்பட்டு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பின்பு, அவரிடமிருந்த 6 மடையான் பறவைகளை கால்நடை உதவி மருத்துவர் சிவசூரியன் மற்றும் வன பணியாளர்கள் முன்னிலையில் முனியப்பன் ஏரி சரணாலய பகுதியில் பறக்கவிட்டப்பட்டது.
- ரிஷிவந்தியத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் தலைமையிலான போலீசார் கெடிலம் கூட்டுரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும், திரும்பிச் செல்ல முய ன்றார். இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் முட்டியம் கிராமத்தை சேர்ந்த கூத்தன் மகன் ரகுராமன் (40) என்பதும், இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருசக்கர வாகனம் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரகுராமனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சுமன் பெண் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளில் பிரேக் போட்டார்.
- பிரேத பரிசோதனைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுமன் (வயது 38) இவர் புதுவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் சுமன் ஆலப்பாக்கத்தில் இருந்து புதுவையில் உள்ள தனியார் கம்பெனிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ஆலப்பா க்கம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது சாலையின் குறுக்கே ஒரு பெண் கடந்து சென்றார். அப்போது சுமன் பெண் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளில் பிரேக் போட்டார். அப்போது எதிர்பாராதமாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் வேகமாக இவரின் மீது மோதியது.
இந்த விபத்தில் சுமன் சம்பவ இடத்திலே பரிதாப மாக உயிரிழந்தார். இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து மரக்காணம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அங்கு தனது இருசக்கர வாகனத்தை மெடிக்கல் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
- சி.சி.டிவி கேமராவில் உள் பதிவுகள் வைத்து விசாரணை நடத்தினர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே தொழுதூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது67). இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் ராமநத்ததில் உள்ள மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்றார்.பின்னர் அங்கு தனது இருசக்கர வாகனத்தை மெடிக்கல் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பின் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை.
இது குறித்து ராஜேந்திரன் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராவில் உள் பதிவுகள் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் மட்டும் இறங்கி வந்து டிவிஎஸ்.எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தை திருடி செல்கின்றனர். மேலும் திருடி சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- திடீரென ரிஸ்வான் கான் சென்ற கார் பள்ளி வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- 4 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேராவூரணி:
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது முகமது (வயது 35).
இவர் கிருஷ்ணாஜி பட்டினத்தில் நர்சரி, பிரைமரி பள்ளி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திகா (26), சத்யா (25) இரண்டு ஆசிரியைகள் மற்றும் 7 பள்ளி குழந்தைகளை பள்ளி வேனில் அழைத்துக் கொண்டு மல்லிப்பட்டினம் மனோராவிற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக பள்ளி வேனில் வந்துள்ளார்.
அப்போது மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி செல்வதற்காக ரிஸ்வான் கான் என்பவர் நான்கு பேருடன் காரை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது மனோரா அருகில் சென்ற போது திடீரென ரிஸ்வான் கான் சென்ற கார் பள்ளி வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பள்ளி தாளாளர் சையது முகமது சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வேனில் இருந்த பள்ளி ஆசிரியைகள் கார்த்திகா மற்றும் சத்யா இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காரில் இருந்த ரிஸ்வான் கான் உள்ளிட்ட நால்வருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆசிரியைகள் சத்யா, கார்த்திகா இருவரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரில் சென்ற 4 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நபர் அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளார்.
- கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள கீழ ஆம்பூர் ஊராட்சி மன்றம் பின்புறம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் கொலை செய்ய ப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட நபர் அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றி திரிந்து வந்துள்ளார். அவரை பார்த்த போலீசார் புகைப்படம் எடுத்ததோடு, அவரை மதுரைக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மீண்டும் கடையத்திற்கு வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தற்போது வரை அவர் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என்பது தெரிய வில்லை. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் புகைப்படத்தை அனைத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.