search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ipl 2019 royal challangers bangalore kings XI punjab"

    மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோலி, வில்லியர்ஸ் ஆட்டத்தால் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #KXIPvRCB
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28-வது லீக் ஆட்டம் மொஹாலியில்  உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    முதலில் இருந்தே இருவரும் அடித்து ஆடினர். இதனால் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் சராசரியாக கிடைத்தது.

    அணியின் எண்ணிக்கை 66 ஆக இருந்தபோது லோகேஷ் ராகுல் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான் ஆகியோர் 15 ரன்னிலும், சாம் குர்ரன் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.



    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் பொறுப்புடன் ஆடிய கெயில் அரை சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்துள்ளது. கெயில் அபாரமாக ஆடி 64 பந்துகளில்  5 சிக்சர், 10 பவுண்டரியுடன் 99 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். இதையடுத்து பெங்களூரு அணி வெற்றிபெற 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு அணி சார்பில் சஹல் 2விக்கெட்டும், மொகமது சிராஜ், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி களம் இறங்கினர்.  இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் ஆட்டத்தின் 3.5 ஓவரில் அஸ்வின் பந்து வீச்சில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து பட்டேல் 19 (9) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  அடுத்ததாக டிவில்லியர்ஸ் களம் இறங்கினார்.  விராட் கோலியும், டிவில்லியர்ஸ் ஜோடி இணைந்து தனது அணியின் ரன்களை உயர்த்த தொடங்கினர்.  இந்த ஜோடியை பிரிக்க பஞ்சாப் அணி பவுலர்கள் பெரும் முயற்சி எடுத்தனர்.  ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது.   ஆனால் ஆட்டத்தின் 15.3 ஓவரில் மொஹமத் சமி வீசிய பந்தில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அணியின் தலைவர் விராட் கோலி 53 பந்துகளை சந்தித்து 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.  இதன் மூலம் அந்த அணி 15.3 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 128 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்ததாக களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ், டிவில்லியர்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியின் ரன்களை உயர்த்த தொடங்கினர்.  ஆட்டத்தின் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது ஆட்டத்தை தொடங்கியது.   இறுதியில் ஆட்டத்தின் 19.2 ஓவரில் டிவில்லியர்ஸ் 59 (38), மார்கஸ் ஸ்டோனிஸ் 28 (16) ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றி பெற செய்தனர். இதன் மூலம் பெங்களூரு அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பஞ்சாப் அணி  வீரர்கள் சார்பில் அஸ்வின், மொஹமத் சமி தலா ஒரு விக்கெட்களை எடுத்திருந்தனர்.

    #IPL2019 #KXIPvRCB
    ×