search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iran summons"

    ஈரான் நாட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 27 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. #IransummonsPakistan #Pakistanenvoyover #Iransuicide
    டெஹ்ரான்:

    இந்தியாவின் எல்லை மாநிலமான காஷ்மீரில் புல்வா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்-இ-முகமது என்ற பயங்கரவா அமைப்பினர் பொறுப்பெற்றனர்.
     
    இந்த நிலையில், ஈரானிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதி உள்ளது. அங்கு எல்லை பாதுகாப்புப் பணியில் ஈரான் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த புதன்கிழமை இப்பகுதிக்குள் புகுந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது அதிரடியாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 27 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இந்த அமைப்பும், இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதர் ரபட் மசவ்ட்-க்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

    எங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்து ஜெய்ஷ் அல்-அடில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பஹ்ரம் கசேமி வலியுறுத்தியுள்ளார். #IransummonsPakistan #Pakistanenvoyover #Iransuicide
    ×