search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iron Smelter"

    • கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம், காத்திருப்பு போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இரும்பு உருக்காலை கடந்த 2 மாதங்களாக செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுடன் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

    • சுமார் 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வரும் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் .

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர் கடந்த 93 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம், காத்திருப்பு போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து இரும்பு உருக்காலை கடந்த 2 மாதங்களாக செயல்பட தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லடம் தாசில்தார் அலுவலகம் முன்பு அனுப்பட்டி, பணிக்கம்பட்டி, ஆறாகுளம், அய்யம்பாளையம், புளியம்பட்டி, கரடிவாவி உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி கூறியதாவது:-

    90 நாட்களுக்கும் மேலாக தொடரும் பொதுமக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலரும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இரும்பு உருக்கு ஆலைக்கு அனுமதி வழங்கி உள்ளனர். ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வரும் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் . சட்ட விரோதமாக செயல்படும் ஆலைக்கு அனுமதி அளித்த அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுடன் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் காத்திருப்பு போராட்டத்தை முன்னிட்டு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட கலெக்டர் நேரில் வந்து தங்களிடம் பேச வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதையடுத்து அவர்களிடம் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ×