search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Isaiah"

    • 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா என்னும் தீர்க்கதரிசி தான்.
    • ஏசாயா தீர்க்கதரிசியின் காலம் கி.மு.740 முதல் 680 வரை எனப்படுகிறது.

    அன்பானவர்களோ ஜவேதாகமதியா கோரேஸ் 1 (சைரஸ்) என்ற ராஜாவைப் பற்றி ஏசாயா என்னும் தீர்க்கதரிசி கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறியது என்பது பற்றி பார்ப்போம்.

    பெர்சியப் பேரரசின் முக்கியமான ராஜாவான சைரஸ் கி.மு.539-ல் உலக சரித்திரத்தில் தன் முத்திரையைப் பதித்தார் என்று வரலாற்றின் மூலம் அறியலாம். ஏனெனில் கி.மு.539-ல் தான் மகா பாபிலோனிய அரசை கோரேஸ் (சைரஸ்) வீழ்த்தி, அதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த பாபிலோனிய அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    ஆனால் இப்படி ஒரு ராஜா வரப் போகிறார் என்றும், அவர் பாபிலோனிய அரசை வீழ்த்துவார் என்றும், இஸ்ரவேல் மக்களுக்கு ஆதரவாக இருப்பார் என்றும் முன்னறிவித்தது யார் தெரியும்?

    150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா என்னும் தீர்க்கதரிசி தான்.

    இப்படி இந்த ராஜாவினுடைய பெயரை 150 ஆண்டுகளுக்கு முன்பாக குறிப்பிட்டது மட்டுமல்ல, அவர் செய்யப் போகிற ஒவ்வொரு காரியங்களைப் பற்றியும் முன்னறிவிக்கிறார் ஏசாயா.


    கிமு 558-ல் பெர்சியா எனப்பட்ட இன்றைய ஈரானை ஆண்ட பேரரசரான சைரஸ் (கி.மு.590-529) இஸ்ரவேல் மக்களுக்கு ஆதரவாக இருந்தார். மேதிய பெர்சிய ராஜியம் எனப்படும் பாரசீகப் பேரரசை நிறுவிய இவர், பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டிருந்த யூதர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பவும், எருசலேமில் தேவாலயத்தை மீண்டும் கட்டவும் இவர் கொடுத்த ஆதரவு இஸ்ரவேல் வரலாற்றில் மிக முக்கிய சம்பவங்களாக கருதப்படுகின்றன.

    ஏசாயா தீர்க்கதரிசியின் காலம் கி.மு.740 முதல் 680 வரை எனப்படுகிறது. இந்த நாட்களில் பாபிலோனிய பேரரசே உருவாகவில்லை. ஏசாயாவின் காலத்திற்கு பின்பு தான், அது ஆரம்பிக்கிறது (கி.மு.645 முதல் 539). ஆனால் அதற்கு முன்பாகவே அந்த பாபிலோனிய பேரரசை வீழ்த்துகிற கோரேஸ் (சைரஸ்) பற்றின துல்லியமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளது எத்தனை ஆச்சரியம் பாருங்கள்.

    நேபுகாத்நேச்சாரின் காலத்தைபாபிலோனிய பேரரசின் உன்னதமான காலங்கள் ஆரம்பிக்கிற வருஷங்களாக எடுத்துக் கொண்டால் பாபிலோனின் சிறப்பான காலம் என்பது கி.மு.624-ல் இருந்து ஆரம்பிக்கிறது.

    நேபுகாத்நேச்சாரின் காலத்தை பாபிலோனிய பேரரசின் உன்னதமான காலம் எனலாம். அதன் வல்லமை, பராக்கிரமம், அதிகரித்துக் கொண்டே போன காலம். பல வகைகளிலும் பாபிலோன் புகழ் பெற்றது. குறிப்பாக ராணுவ பலம், அதன் தலைநகர், முக்கிய நதியான யூப்பி ரட்டீஸ் நதியோரம் அமைந்திருந்ததால் செழிப்பான நகரமாக இருந்தது. சைரசின் ஆட்சிக்காலத்தில் அவர் பல வெற்றிவாகைகளை சூடிக்கொண்டிருந்தபோது கி.மு. 539-ம் ஆண்டில் பாபிலோன் அரசு அவர் போரிடாமலேயே சைரஸ் பேரரசரிடம் சரணடைந்தது.

    ஏசாயா தனக்கு பின் தோன்றுகிற கோரேஸ் (சைரஸ்) மகாராஜாவைப் பற்றி கூறுகிறார்:

    'கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும். அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும் படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலது கையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: நான் உனக்கு முன்னே போய், கோணலான வைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர் சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவ னாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள் களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல் களையும் உனக்குக் கொடுப்பேன், நான் என் தாசனாகிய யாக்கோபி , நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித் னிமித்தமும் தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை என்று அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்' கூறுகிறார்.

    வரலாற்றில் நீங்கள் முதலாம் சைரசை பற்றி படித்து பாருங்கள். இவர் சென்ற இடமெல்லாம் வெற்றிபெற்று சிறந்த பராக்கிரமம் நிறைந்த ராஜாவாக இருந்தார்.

    பிரியமானவர்களே, இன்றைக்கு உங்களைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார். நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்".


    ஆம் அன்பானவர்களே, எந்த காரியங்கள் உங்களுக்கு தடையாக இருக்கிறதோ, அந்த காரியங்களில் நிச்சயமாக ஜெயம் பெறுவீர்கள். தடைகளை மாற்றுகிற தேவன் உங் களுக்கு முன்னே சென்று, தடைகளை மாற்றுவார். நீங்கள் எதிர்பார்க்கும் விஷயத்தில் வெற்றியைத் தருவார்.

    அன்றைக்கு கோரேஸ் மகாராஜாவுக்கு (சைரஸ்) உலக சாம்ராஜ்யமாக திகழ்ந்த பாபிலோனை திறந்து கொடுத்த தேவன், இன்றைக்கு உங்கள் வாழ்க்கையிலும் எதைக் கண்டு நீங்கள் அஞ்சி பயப்படுகிறீர்களோ, அந்த காரி யத்தில் வெற்றி தர போதுமானவராய் இருக்கிறார். திறக் கப்படாத வாசல்கள் எல்லாம் உங்களுக்கு திறக்கும்.

    நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு, உயிரோடு எழுந்த கர்த்தராகிய இயேசுவை நோக்கி பாருங்கள், அவர் உங்கள் காரியங்களில் ஜெயத்தை தருவார், பதிலைத் தருவார், தாமதித்தாலும் காத்திருங்கள், நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் நிச்சயமாக கைகூடும், ஆமேன்.

    ×