search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISIS remark"

    வேலையில்லா திண்டாட்டமும், வளர்ச்சி திட்டங்களில் இருந்து மக்களை ஒதுக்குவதும் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் உருவாக வழிவகுத்துவிடும் என்ற ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. #RahulGandhi #ISISRemark #BJP
    புதுடெல்லி:

    ஜெர்மனியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹம்பர்க் நகரில் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர், ‘வேலையில்லா திண்டாட்டமும், வளர்ச்சி திட்டங்களில் இருந்து மக்களை ஒதுக்குவதும் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் உருவாக வழிவகுத்துவிடும்’ என்று கூறினார்.

    ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா போன்ற குழுக்களின் கொள்கைகளை ஏற்கனவே நாம் நிராகரித்து இருக்கிறோம். அப்படியிருக்க ராகுல் காந்தியின் அச்சுறுத்தலுக்கு பின்னால் இருக்கும் பொருளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தலைவரான பிறகும், நாட்டில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களை ராகுல் காந்தி இன்னும் புரிந்து கொள்ளவில்லை’ என்று தெரிவித்தார்.

    இதைப்போல பா.ஜனதா கட்சியும் ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. #RahulGandhi #ISISRemark #BJP
    ×