என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » isismillitants
நீங்கள் தேடியது "ISISMillitants"
சிரியாவில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷமீமா பேகத்தினை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என அவரது தந்தை கேட்டுக் கொண்டுள்ளார். #ISISMillitants #ShamimaBegam
லண்டன்:
லண்டனில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறினர். மூவரும் சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தனர். ஷமீமா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நெதர்லாந்து நபரை மணந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்து, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறந்தன.
அதன்பின்னர் சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சிலர் சரண் அடைந்தனர். அப்பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதில் ஷமீமா பேகமும் ஒருவர் ஆவார்.
இதற்கிடையே அகதிகள் முகாமில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷமீமா பேகத்துக்கு குழந்தை பிறந்ததாக கடந்த பிப்ரவரி 19ம் தேதி அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் ஷமீமா பேகத்தின் பிரிட்டன் குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து ஷமீமா பேகத்தின் தந்தை அலி கூறியிருப்பதாவது:
ஷமீமாவின் குடியுரிமையை ரத்து செய்வது முறையான நடவடிக்கை அல்ல. தவறு செய்வது மனிதர்களின் இயல்பு. நாம் அனைவரும் தவறுகள் செய்கிறோம். என் மகளின் இந்த செயலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஷமீமா தானாக சிரியாவிற்கு செல்ல முற்படவில்லை. ஐஎஸ் இயக்கத்தில் இணைய மூளை சலவை செய்யப்பட்டுள்ளது. தவறான வழிகாட்டுதலால் இவ்வாறு செய்துவிட்டாள். முன்னதாக குடியுரிமையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக உள்துறை அதிகாரிகளிடம் இருந்து கடிதம் வந்தது. அதில் ஷமீமா இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஷமீமா பேகத்தை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும். அவள் தவறு செய்திருந்தால் நாட்டிற்கு அழைத்து வந்து, அதன்பிறகு விசாரணை நடத்தி தண்டனை வழங்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #ISISMillitants #ShamimaBegam

அமெரிக்காவின் அலபாமா பகுதியில் இருந்து சென்று ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்த பெண் மீண்டும் நாடு திரும்ப முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trump #ISISMillitants
வாஷிங்டன்:
இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியாவில் பிடிபட்ட ஐஎஸ் இயக்கத்தினரை நாடு திரும்ப அனுமதித்து அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என லண்டன் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளை கேட்டுக்கொண்டார். அப்படி செய்யாவிட்டால், அமெரிக்கா தலைமையிலான குர்திஷ் படையினர் அவர்களை விடுவிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஹோடா முத்தானா நாடு திரும்பக் கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது என வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவிற்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பெண்ணின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டதாகவும், மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப இயலாது எனவும் மைக் பாம்பியோ ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால், அவரிடம் அமெரிக்க குடியுரிமை இருப்பதாக அவரது வழக்கறிஞர் ஹசான் ஷிப்ளி கூறியுள்ளார்.
‘ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடு திரும்ப அனுமதிக்கும்படி டிரம்ப் கேட்டுக் கொண்டார். தற்போது அமெரிக்கா என வரும்போது முரண்பாடான கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் முத்தானாவிடம் முறையான அமெரிக்க பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான ஆவணம் உள்ளது’ என்றும் ஹசான் ஷிப்ளி தெரிவித்துள்ளார். #Trump #ISISMillitants
அமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த ஹோடா முத்தானா(24) , சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைய விரும்பினார். இதற்காக துருக்கியில் உள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி சிரியா சென்றார். பின்னர் இறுதிக்கட்ட தாக்குதலின்போது கைது செய்யப்பட்டார். இதேபோல் மேலும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியாவில் பிடிபட்ட ஐஎஸ் இயக்கத்தினரை நாடு திரும்ப அனுமதித்து அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என லண்டன் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளை கேட்டுக்கொண்டார். அப்படி செய்யாவிட்டால், அமெரிக்கா தலைமையிலான குர்திஷ் படையினர் அவர்களை விடுவிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஹோடா முத்தானா நாடு திரும்பக் கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது என வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவிற்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பெண்ணின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டதாகவும், மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப இயலாது எனவும் மைக் பாம்பியோ ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால், அவரிடம் அமெரிக்க குடியுரிமை இருப்பதாக அவரது வழக்கறிஞர் ஹசான் ஷிப்ளி கூறியுள்ளார்.
‘ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடு திரும்ப அனுமதிக்கும்படி டிரம்ப் கேட்டுக் கொண்டார். தற்போது அமெரிக்கா என வரும்போது முரண்பாடான கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் முத்தானாவிடம் முறையான அமெரிக்க பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான ஆவணம் உள்ளது’ என்றும் ஹசான் ஷிப்ளி தெரிவித்துள்ளார். #Trump #ISISMillitants
சிரியாவில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷமீமா பேகத்தின் பிரிட்டன் குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளது. #ISISMillitants #ShamimaBegam #CitizenshipStrip
லண்டன்:
லண்டனில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறினர். மூவரும் சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தனர். ஷமீமா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நெதர்லாந்து நபரை மணந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்து, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறந்தன.
அதன்பின்னர் சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சிலர் சரண் அடைந்தனர். அப்பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதில் ஷமீமா பேகமும் ஒருவர் ஆவார்.
இதற்கிடையே அகதிகள் முகாமில் ஷமீமா பேகத்துக்கு குழந்தை பிறந்ததாக கடந்த பிப்ரவரி 19ம் தேதி அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஷமீமா பேகத்தின் பிரிட்டன் குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக உள்துறை அதிகாரிகளிடம் இருந்து நேற்று ஷமீமாவின் தாயாருக்கு கடிதம் வந்ததாகவும், அதில் ஷமீமா மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டிருந்ததாகவும் செய்தி வெளியானது.
இந்த தகவல் அறிந்து ஷமீமாவின் குடும்பத்தினர் மிகவும் வருத்தத்துடன் உள்ளதாகவும், இந்த முடிவினை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அவரது குடும்ப வழக்கறிஞர் டஸ்னிம் அகுன்சீ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #ISISMillitants #ShamimaBegam #CitizenshipStrip

அங்கு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷமீமா பேகம், தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் எதிர்காலத்திற்காக லண்டன் திரும்ப விரும்புவதாக கூறினார். மீண்டும் நாடு திரும்ப எது வேண்டுமானாலும் செய்யவுள்ளதாகவும், தனது குழந்தையுடன் சேர்ந்து அமைதியான வாழ்வை தொடர ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கிடையே அகதிகள் முகாமில் ஷமீமா பேகத்துக்கு குழந்தை பிறந்ததாக கடந்த பிப்ரவரி 19ம் தேதி அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஷமீமா பேகத்தின் பிரிட்டன் குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக உள்துறை அதிகாரிகளிடம் இருந்து நேற்று ஷமீமாவின் தாயாருக்கு கடிதம் வந்ததாகவும், அதில் ஷமீமா மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டிருந்ததாகவும் செய்தி வெளியானது.
இந்த தகவல் அறிந்து ஷமீமாவின் குடும்பத்தினர் மிகவும் வருத்தத்துடன் உள்ளதாகவும், இந்த முடிவினை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அவரது குடும்ப வழக்கறிஞர் டஸ்னிம் அகுன்சீ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #ISISMillitants #ShamimaBegam #CitizenshipStrip
இங்கிலாந்து திரும்ப விருப்பம் தெரிவித்த ஐ.எஸ். பெண் ஷமீமா பேகத்திற்கு குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பெய்ரூட்:
இங்கிலாந்து தலைநகர் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் ஷமீமா பேகம் என்ற மாணவி படித்து வந்தார். இணையதளம் மூலம் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட இவர் தனது பள்ளி தோழிகள் 2 பேருடன் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிரியா சென்று ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தார்.
அங்கு அவர் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சிரியாவில் ஐ.எஸ். இயக்கம் தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட நிலையில், ஷமீமா பேகம் அங்குள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்துள்ளார். சமீபத்தில் அவர், தான் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், தனது குழந்தைக்காக லண்டன் திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், திருமணம் முடிந்த குறுகிய காலத்திலேயே எனது கணவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்றும், தனக்கு பிறந்த 2 குழந்தைகளும் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறினார்.
ஆனால் ஷமீமா பேகம் நாடு திரும்ப அனுமதி அளிக்க முடியாது என இங்கிலாந்து அரசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அகதிகள் முகாமில் ஷமீமா பேகத்துக்கு குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். #Londonpregnantlady #ISISMillitants
லண்டன்:
லண்டனில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறினர். சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைய விரும்பிய அவர்கள், முதலில் துருக்கி சென்று அங்கிருந்து சிரியா சென்றுள்ளனர்.
அந்நாட்டில் ஆன்லைன் மூலம் பயங்கரவாத அமைப்புகள் ஏற்படுத்திய வாய்ப்புகளை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். சிரியாவின் ரக்காவிற்கு வந்த ஷமீமா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நெதர்லாந்து நபரை மணந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்து, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறந்தன.
அதன்பின்னர் சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சிலர் சரண் அடைந்தனர். அப்பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதில் ஷமீமா பேகமும் ஒருவர். தற்போது இவர் 9 மாத கர்ப்பமாக இருக்கிறார்.
இது குறித்து ஷமீமா பேகம் கூறுகையில், 'ஏற்கனவே நான் இரண்டு குழந்தைகளை இழந்த நிலையில், தற்போது வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக லண்டன் திரும்ப விரும்புகிறேன். இந்த முகாமில் இருப்பதால் குழந்தை குறைபாடுகளுடன் இருக்கிறதோ எனும் அச்சத்துடன் இருக்கிறேன்.
இன்னும் சில தினங்களில் குழந்தை பிறக்கும் தருவாயில் உள்ளது. மீண்டும் நாடு திரும்ப எது வேண்டுமானாலும் செய்யவுள்ளேன். எனது குழந்தையுடன் சேர்ந்து அமைதியான வாழ்வை தொடர ஆசைப்படுகிறேன்' என்றார்.
கடந்த வாரம் ரக்காவில் நடைபெற்ற தாக்குதலில், தன்னுடன் வந்த சுல்தானா இறந்ததாகவும், தனது கணவர் சிரியா போலீசில் சரண் அடைந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வல்லஸ் கூறும்போது, 'இதுபோன்ற சூழ்நிலையில், அரசாங்கம் அப்பெண்ணை மீண்டும் நாடு திரும்ப கட்டாயம் உதவ வேண்டும். எனினும், அந்த பெண் பயங்கரவாதிகளுக்கு உதவியதால் சிறை செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது' என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Londonpregnantlady #ISISMillitants

×

X