search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "James Anderson"

    எனது சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்து விட்டால், அவரது சாதனையை எவராலும் தொட முடியாது என மெக்ராத் கூறியுள்ளார். #Anderson
    ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் க்ளென் மெகராத். இவர் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 முறை ஐந்து விக்கெட், 3 முறை 10 விக்கெட்டுக்களுடன் 563 விக்கெட்டுக்கள் குவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியதில் மெக்ராத் முதல் இடத்தில் உள்ளார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார்.

    அப்போது தனது விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கூறியிருந்தார். ஆனால் 36 வயதாகும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத் சாதனையை உடைக்க இருக்கிறார்.

    இவர் 141 போட்டிகளில் 26 ஐந்து விக்கெட், 3 பத்து விக்கெட்டுக்களுடன் 557 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இன்னும் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் மெக்ராத் சாதனையை முறியடிப்பார். இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கிறது. அப்போது இந்த சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது.



    இந்நிலையில் ஒருமுறை எனது சாதனையை ஆண்டர்சன் முறியடித்து விட்டால், அவரை எவராலும் தொட இயலாது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘நான் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது அதிக அளவில் மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு வாழ்த்துக்கள். ஒருமுறை என்னுடைய சாதனையை அவர் முறியடித்து விட்டார், அதன்பின் அவரை எவராலும் தொட இயலாது.



    சாதனை என்பது அருமையானது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்ததற்காக பெருமைப்படுகிறேன்.

    எனது சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடிக்கும்போது அவருக்கு சமமான சந்தோசம் அடைவேன். ஏனென்றால், எந்தவொரு நாட்டில் இருந்து விளையாடினாலும், வேகப்பந்து வீச்சாளர் என்பது அவர்களை ஒருங்கிணைக்கும்’’ என்றார்.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக ஹர்திக் பாண்டியா விக்கெட் உடன் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரராகியுள்ளார் ஆண்டர்சன். #ENGvIND #Anderson
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நேற்று தொடங்கியது. ஸ்விங் பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். ஆண்டர்சன் இந்திய வீரர்களை அச்சுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தொடக்கத்தில் 7 ஓவர்கள் தொடர்ச்சியாக வீசினாலும் தவான் மற்றும் கேஎல் ராகுலை ஆண்டர்சனால் ஒன்னும் செய்ய இயலவில்லை. 21 ஓவர்கள் வீசிய ஆண்டர்சனால் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

    ஆட்டத்தின் 87-வது ஓவரை ஆண்டர்சன் வீசினார். இது அவருக்கு 22-வது ஓவராகும். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியாவை வீழ்த்தினார். இந்த ஓவரோடு முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.



    ஹர்திக் பாண்டியா விக்கெட் மூலம் இந்தியாவிற்கு எதிராக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆவார்.

    முத்தையா முரளீதரன் 105 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். 94 விக்கெட்டுக்களுடன் இம்ரான் கான் 3-வது இடத்திலும், 76 விக்கெட்டுக்களுடன் மால்கம் மார்ஷல் 4-வது இடத்திலும், 67 விக்கெட்டுக்களுடன் ஆண்டி ராபட்ர்ஸ் 5-வது இடத்திலும் உள்ளனர்.
    நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ்-யில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 9 போட்டிகளில் 60 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களும் வீழ்த்தி இந்தியாவை படுதோல்வியடையச் செய்தார்.

    அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 553 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். இன்னும் 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். மெக்ராத் 563 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    3-வது டெஸ்ட் நாளை மறுநாள் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ்-யில் நடக்கிறது. டிரென்ட் பிரிட்ஜ் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு சொர்க்க பூமியாக திகழ்கிறது. இங்கு இதுவரை ஆண்டர்சன் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 60 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும். அப்படி என்றால்தான் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால், ஆண்டர்சன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ஆண்டர்சன் 2003-ல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5 விக்கெட்டும், 2008-ல் நியூசிலாந்திற்கு எதிராக 7 விக்கெட்டும், 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 11 விக்கெட்டுக்களும், 2013-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 10 விக்கெட்டும், 2017-ல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5 வி்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
    ஜேம்ஸ் ஆண்டர்சனால் 40 வயது வரை சிறப்பாக பந்து வீச முடியும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார். #Anderson
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 36 வயதாகும் இவர் இன்னும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவிற்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட்டுக்கள் அள்ளி இந்தியா சீர்குலைய முக்கிய காரணமாக இருந்தார்.

    இதுவரை 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 553 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ள ஆண்டர்சனால் 40 வயது வரை விளையாட முடியும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

    ஆண்டர்சன் 903 புள்ளிகள் பெற்று டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இதன்மூலம் 1980-ம் ஆண்டு இயன் போத்தமிற்குப் பிறகு 38 வருடங்கள் கழித்து ஆண்டர்சன் 900 புள்ளிகளை நடது சாதனைப் படைத்துள்ளார்.

    ஆண்டர்சன் குறித்து பெய்லிஸ் கூறுகையில் ‘‘உலகில் இல்ல பெரும்பாலான பந்து வீச்சாளர்களை பார்த்தீர்கள் என்றால் 30 வயதை தாண்டிய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது வேகத்தை இழந்து விடுவார்கள். ஆனால் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீசும் திறமையை பெற்றுள்ளார். அவருடைய பந்து வீச்சை பார்க்கும் போது மிகமிக சிறந்தவராக தோன்றுகிறார்.



    இதுபோன்ற சூழ்நிலையில் ஆண்டர்சன் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். லார்ட்ஸ் டெஸ்டின் போது இருந்து வானிலை இருக்குமென்றால், உலகின் எந்தவொரு பேட்ஸ்மேன்களுக்கும் சோதனைத்தான்.

    அவருடைய வயது பற்றி நான் சிந்திக்கவில்லை. அவருடைய உடலை பிட்ஆக வைத்துள்ளார். இப்படி பிட் ஆக உடலை பாதுகாத்து வந்தால் அவரால் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் விளையாட முடியும்’’  என்றார்.
    முரளி விஜயை டக்அவுட்டாக்கி ஒரே மைதானத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமைய ஆண்டர்சன் பெற்றுள்ளார். #JamesAnderson
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 107 ரன்னில் சுருண்டது. ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன்மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் 99 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் முரளி விஜய் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.



    இந்த விக்கெட் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதன்மூலம் ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் கொழும்பு (எஸ்எஸ்சி) மைதானத்தில் 166 விக்கெட்டும், காலே மைதானத்தில் 111 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். தற்போது ஆண்டர்சன் லார்ட்ஸில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
    எனக்கு வயதாகி விட்டதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களை போலவே களத்தில் இன்னும் என்னால் முழு அளவில் சாதிக்க முடியும் என்று உணர்கிறேன் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறினார். #JamesAnderson
    லண்டன்:

    லண்டனில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியாவுக்கு எதிராக மட்டும் அவர் இதுவரை 95 விக்கெட்டுகள் (24 டெஸ்ட்) சாய்த்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பாகிஸ்தானின் இம்ரான்கானிடம் (94 விக்கெட்) இருந்து தட்டிப்பறித்தார்.

    பின்னர் 36 வயதான ஆண்டர்சன் கூறுகையில், ‘எனக்கு வயதாகி விட்டதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களை போலவே களத்தில் இன்னும் என்னால் முழு அளவில் சாதிக்க முடியும் என்று உணர்கிறேன். இதே உணர்வு இருக்கும் பட்சத்தில் முடிந்த அளவுக்கு நீண்ட காலம் விளையாட முடியும்’ என்றார்.  #JamesAnderson
    டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் பட்டியலில் அனில் கும்ப்ளே உடன் இணைந்தார் ஆண்டர்சன். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல்நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் இன்று டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது.

    இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள்.



    இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஆண்டர்சன் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் இங்கிலாந்து மண்ணில் 350 விக்கெட்டுக்களை கைப்பற்றி, சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே உடன் பகிர்ந்துள்ளார்.

    இலங்கையின் முத்தையா முரளிதரன் 493 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார். வார்னே 319 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். ஆண்டர்சன் 140 போட்டிகளில் 546 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    இங்கிலாந்து அணி மிகவும் கோபமான அணி, விராட் கோலிக்கு சவால் ஆகிய மந்திரத்துடன் களம் இறங்குங்கள் என்று முன்னான் வீரர் வாகன் இங்கிலாந்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. 2011 மற்றும் 2014-ல் படுதோல்வியடைந்த இந்தியா, இந்த முறை தொடரை கைப்பற்றும் என நம்பப்படுகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து கோபமான அணி, விராட் கோலிக்கு சவால் ஆகிய தார்மீக மந்திரத்துடன் களம் இறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘ஜோ ரூட் தன் அணி வீரர்களிடம், நாம் நிரூபிக்க வேண்டியுள்ளது என்று சம்மட்டியடித்தது போல், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று பிறகு ஹெட்டிங்லேயில் கோபமாக மீண்டெழுந்து வெற்றி பெற்றதுபோல் விராட் கோலி அணிக்கு எதிராக இங்கிலாந்து கோபம் மற்றும் ஆவேசமாக ஆட வேண்டும் என்று அணியிடம் வலியுறுத்த வேண்டும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஹெட்டிங்லே 2-வது டெஸ்டின் முதல் நாளில் என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்க வேண்டும் என்று வீரர்களிடம் கூற வேண்டும். சில வேளைகளில் அணியின் விவாதத்தின்போது இப்படி செய்ய இயலாது. சில நேரங்களில் ஒவ்வொரு வீரர்களிடம் பேசும்போது அதற்கு பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வீரர்களிடமும் சென்று, பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாட லீட்ஸிற்கு ஏன் தீவிர நோக்கத்துடன் வந்தீர்கள்? என்று கூற வேண்டும்.

    உதை வாங்கி விட்டு விமர்சனங்களுக்கு பதில் கொடுப்பதை விடுத்து தொடக்கத்திலேயே இங்கிலாந்து இத்தகைய அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆதில் ரஷித் விவகாரம் இதற்கு உதவும்.

    இங்கிலாந்து ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல முடியாது. அந்த அளவுக்கு அணி நன்றாக இல்லை. ஆனால் ஒவ்வொரு வாரமும் மனநிலையில் அதே சிந்தனையை வைத்துக் கொள்ள முடியும்.

    ஜோ ரூட் 16 டெஸ்டுகளில் 50-க்கும் மேல் சராசரி வைத்துள்ளார், ஆனால் அவர் அரைசதங்களை சதமாக மாற்றத் திணறுகிறார். இதை சரிசெய்ய வேண்டும்.



    கோலியின் முன் கால் நகர்த்தலுக்கு பிராட், ஆண்டர்சன் சவால் அளிக்க வேண்டும். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து வீசி ஒரு பந்தை ஸ்ட்ரெய்ட்டாக வீசி அவரை ஆட வைத்து அவுட் ஆக்க வேண்டும்.

    கோலியின் இடது கால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வர வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தன் ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்ற சந்தேகம் அவருக்கு எழும். அப்போது ஆஃப் திசையில் ஸ்கொயராக ஆடும்போது எட்ஜ் வாய்ப்புகள் அதிகம்.

    ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு அடி வெளியே செல்லும் பந்துகளுக்கு அவர் பலவீனம் தெரிகிறது. இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் எழுச்சி பெற்று கோலியின் பிரன்ட் ஃபுட் ஆட்டத்திற்கு சவால் கொடுக்க வேண்டும்” என்றார்.
    இந்தியாவிற்கு எதிரான டெஸ்டிற்கு தயாராகும் இங்கிலாந்தின் மூத்த வீரர்களான ஆண்டர்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன் யோ-யோ டெஸ்டில் அசத்தியுள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்காமில் தொடங்குகிறது. இதற்கு ஆயத்தம் ஆகும் வகையில் இங்கிலாந்து வீரர்கள் யோ-யோ டெஸ்டில் கலந்து கொண்டார்கள்.

    இளம் வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால், 33 வயதிற்கு மேலான குக், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் திணறுவார்கள் என்று எதிர்பார்த்தனர்.



    ஆனால், அலஸ்டைர் குக் யோ-யோ டெஸ்டில் அசால்டாக பாஸ் ஆனார். அதேபோல் ஜேம்ஸ் ஆண்டர்சனும் தேர்ச்சி பெற்றார். இந்திய அணி வீரர்கள் 16.1 புள்ளி பெற்றாலே பாஸ். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் 19 புள்ளிகள் பெற வேண்டும்.

    யோ-யோ டெஸ்டிற்கு முன் அலஸ்டைர் குக் 3 கி.மீட்டர் தூரம் ஓடியதாக தெரிகிறது.
    முதல் இரண்டு டெஸ்டில் 250 ஓவர்கள் வீசினால், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது நடைமுறைக்கு ஒத்து வராதது என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளைமறுநாள் புதன்கிழமை (ஆகஸ்ட்-1) தொடங்குகிறது. ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 42 நாட்களில் நடக்கிறது.

    42 நாட்களில் (6 வாரம்) ஐந்து டெஸ்ட் என்பது அடுத்தடுத்து விளையாடுவதற்கு சமம் என்று வீரர்கள் கருதுகிறார்கள். இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

    அதேவேளையில் 36 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 வாரங்கள் விளையாடாமல் இருந்தார். 32 வயதாகும் ஸ்டூவர்ட் பிராட் மூட்டு வலி காரணமாக சிகிச்சை மேற்கொண்டார். தற்போது இந்திய தொடருக்காக தயாராகி வருகிறார்கள்.

    பந்து வீச்சு பளு காரணமாக நீண்ட தொடரான இதில் இரண்டு பேருக்கும் சுழற்சி (rotated) முறையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இரண்டு டெஸ்டில் தலா 250 ஓவர்கள் வீசப்பட்டால் ஐந்து டெஸ்டில் விளையாடுவது சாத்தியமற்றது என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் ‘‘நாங்கள் தொடர்ந்து விளையாடுவது போட்டியின் டாஸ், ஆடுகளம் மற்றும் வேலைப்பளு ஆகியவற்றைச் சார்ந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தலா 250 ஓவர்கள் வீசப்பட்டால், வேகப்பந்து வீச்சாளர்கள் 6 வாரத்தில் ஐந்து போட்டிகளில் விளையாடுவார்கள் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது.

    ஆனால், ஒரு டெஸ்டில் 80 அல்லது 60 ஓவர்களில் ஆல்அவுட் ஆக்கிவிட்டால், அதன்பின் பந்து வீச்சாளர்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்படும்.

    ஆடுகளம் அதிக அளவில் டர்ன் ஆனால் ஸ்பின்னர்கள் அதிக அளவிலான ஓவர்களை வீசுவார்கள். அப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் ஓவர்கள் வீச வேண்டிய நிலை ஏற்படாது. அதேவேளையில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது என்றால் வேகப்பந்து வீச்சுக்கு அதிக வேலை இருக்கும்’’ என்றார்.
    2012-ல் இந்தியாவில் நடைபெற்ற தொடரை கைப்பற்றியது ஆஷஸ் தொடரை வென்றதற்கு சமமானது என்று வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். #Anderson
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. கடந்த முறை இந்தியா இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக விராட் கோலியின் ஆட்டம் படுமோசமாக இருந்தது.

    புதுப்பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிக அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அப்போது, 2012-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தபோது டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது மிகவும் சிறந்த நினைவுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘நாங்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினோம். அப்போது தென்ஆப்பிரிக்கா அணி நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. இது ஒரு சிறந்த டெஸ்ட் தொடராக இருந்தது.

    தற்போது இந்திய அணிக்கெதிராக விளையாட இருப்பது எனக்கு அதேபோல்தான் தோன்றுகிறது. நான் இதுவரை இந்திய மண்ணில் விளையாடியதில் 2012-ம் ஆண்டு நடைபெற்றதுதான் தலைசிறந்த டெஸ்ட் தொடர். ஒரு வேகப்பந்து வீச்சாளர் நீங்கள் இந்தியாவிற்குச் செல்லும்போது ஒவ்வொருவரும் சொல்வது சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்கள் வீழ்த்துவார்கள். சிறந்த வேகபந்து வீச்சாளர் என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்பதுதான்.



    ஆகவே, இந்திய மண்ணில் 2-1 எனத் தொடரை கைப்பற்றியது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் பெருமையான தொடராக கருதுகிறேன். எந்தவொரு பந்து வீச்சாளர்களும் சிறந்த அணிக்கெதிராக விளையாட வேண்டும். அப்போது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த விரும்புவார்கள். இதுதான் எனக்கு தூண்டுதலாக இருக்கும்’’ என்றார்.

    2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை 2-1 என வெற்றி பெற்றது. அப்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தான் ரன் அடிக்காவிடிலும் இந்தியா வெற்றி பெற்றால் போதும் என்று கோலி சொன்னால், அது பொய் என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஆண்டர்சன் கூறியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொணட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இதில் விராட் கோலி எப்படி விளையாடுகிறார்? என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அப்போது 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். விராட் கோலியின் மிகவும் மோசமான டெஸ்ட் தொடர் இதுவாகும்.

    அதன்பின் இங்கிலாந்து இந்தியா வந்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அப்போது இந்தியா தொடரை 4-0 என வென்றது. இந்த தொடரில் விராட் கோலி 655 ரன்கள் குவித்தார்.

    இங்கிலாந்து தொடர் குறித்து விராட் கோலி பேசுகையில், இந்திய அணி வெற்றி பெறுகிறதா? என்பதுதான் முக்கியம். நான் ரன் அடிக்கிறேனா, இல்லையா என்பது பெரிய விஷயம் இல்லை என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் விராட் கோலியின் ரன் முக்கியமில்லை என்று அவர் கூறினால், அது பொய் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றில் பெற்றால் அது பெரிய விஷயம்தான். விராட் அவருடைய அணிக்காக ரன்கள் குவிக்க ஆவலாக இருப்பார். உலசின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், அணியின் கேப்டனும் ஆன அவரிடம் இந்தியா அணி அதை எதிர்பார்க்கும்.



    இப்போதைய காலக்கட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் ஃபூட்டேஜ்ஜில் இருந்து மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. அவர்களுடைய கடந்த கால அனுபவத்தில் இருந்தும் கற்றுக் கொள்கிறார்கள். ஆகவே, நான் விராட் கோலியின் திறமையை 2014 தொடரில் இருந்தும் என்னால் கற்றுக்கொள்ள முடியும்.

    விராட் கோலி கடினமாக பயிற்சி மேற்கொண்டிப்பார் என்பது எனக்கு உறுதியாக தெரியும். இங்கிலாந்து எதிரான தொடர் விராட் கோலிக்கும் எனக்கும் இடையிலான போட்டியல்ல. மீதமுள்ள இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கும்தான். இது மிகவும் அற்புதமான ஒன்று’’ என்றார்.
    ×