என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jannik Siner"
- மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு சபலென்கா மற்றும் ஜெசிகா பெகுலா ஆகியோர் தகுதி பெற்றனர்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர், பிரான்சிஸ் தியாபோ உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
சின்சினாட்டி:
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு அரினா சபலென்கா (பெலாரஸ்) மற்றும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் தகுதி பெற்றனர். இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட சபலென்கா 6-3 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), பிரான்சிஸ் தியாபோ (அமெரிக்கா) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சின்னெர், முதல் செட்டை டை -பிரேக்கர் வரை சென்று போராடி கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். சின்னெர் இந்த ஆட்டத்தில் 7-6 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.