search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Japan agriculture"

    ஜப்பானில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஆளில்லா விமானங்கள் மூலம் நெல் வயல்களில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. #Drones
    டோக்கியோ:

    விவசாயத்தில் தொழில் நுட்பத்தை புகுத்தும் முயற்சியில் ஜப்பான் தீவிரமாக உள்ளது. சமீபகாலமாக அங்கு விவசாய தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    அதை போக்கும் வகையில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானங்களை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் நெல் வயல்களில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட உள்ளது. இப்பணிகளை அவை 15 நிமிடங்களில் செய்து முடிக்கும். சமீபத்தில் இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.


    நைல் ஒர்க் நிறுவனம் ஜா ஜியாகி என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. அதற்கு நைல்- டி18 என பெயரிடப்பட்டுள்ளது.

    ஜப்பானில் தற்போது பெரும்பாலான விவசாயிகள் 67 முதல் 68 வயதினராக உள்ளனர். அவர்கள் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் விவசாயத்தில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்கள்.

    அதன் பின்னர் விவசாய பணிக்கு வரும் இளைய தலைமுறையினருக்கு இந்த அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது. #Drones
    ×