search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jashodaben"

    திருமணம் செய்த மனைவியை கைவிட்ட பிரதமர் மோடிக்கு குடும்ப அமைப்பின் மீது எப்படி மதிப்பிருக்க முடியும்? என ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். #ChandrababuNaidu #Modiwife #Jashodaben
    அமராவதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவரது மகனின் பெயரை சுட்டிக்காட்டி ‘லோகேஷின் தந்தை’ என்று கிண்டலாக கூறினார்.

    இதனால், ஆத்திரமடைந்த சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் இன்று நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் மனைவி பெயரை குறிப்பிட்டு கடுமையாக தாக்கிப் பேசினார்.

    ‘நான் ஒரு குடும்பஸ்தன். எனது குடும்பத்தாரை நான் மிகவும் நேசிக்கிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால், பிரதமர் மோடிக்கு மனைவியும் இல்லை, குடும்பமும் இல்லை. ஆனால், இன்று அவர் என்னுடைய மகனை குறிப்பிட்டு பேசியதால் மோடியின் மனைவியைப்பற்றி நான் இப்போது பேச வேண்டியுள்ளது. 

    மக்களே!,  நரேந்திர மோடிக்கு ஒரு மனைவி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மனைவியின் பெயர் ஜசோதாபென். திருமணம் செய்த மனைவியை கைவிட்ட பிரதமர் மோடிக்கு குடும்ப அமைப்பின் மீது எப்படி மரியாதை இருக்க முடியும்?’ என சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

    நாட்டையும் நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புகளையும் பிரதமர் மோடி சீரழித்து வருவதாக குற்றம்சாட்டிய சந்திரபாபு நாயுடு, மோடி இன்று குண்டூரில் பேசிய பொதுக்கூட்டத்துக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பணம் கொடுத்து அந்த கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.

    இதன் மூலம் மோடியின் ஆந்திர மாநில சுற்றுப்பயணம் தோல்வியில் முடிந்துள்ளது. மோடியின்  பா.ஜ.கவை இங்குள்ள மக்கள் புறக்கணித்து விட்டனர் என்பது அவருக்கு நன்றாக புரிந்து விட்டது. தெலுங்கு பேசும் மக்கள் தங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு தகுந்த பாடத்தை உரிய நேரத்தில் கற்பிப்பார்கள் என்பது மீண்டும் ஒருமுறை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். #ChandrababuNaidu #Modiwife #Jashodaben 
    பிரதமர் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #PMModi
    போபால்:

    நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்து பின்னர் பிரதமர் ஆனார். அவர், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியதும் ஆனந்தி பென் பட்டேல் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

    அவர், தற்போது மத்திய பிரதேச மாநில கவர்னராக இருந்து வருகிறார். அங்குள்ள கர்தா மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்தார்.

    திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் கலந்து கொண்டு அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து புகழ்ந்து பேசிய ஆனந்தி பென் பட்டேல், நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று கூறினார்.

    அவர், தனது பேச்சில் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் திருமணம் ஆகாதவர் என்றாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகள் குறித்து நன்றாக அறிந்தவர்.

    குழந்தைகள் பிறப்பதற்கு முன்பும், பிறந்த பிறகும் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் தெரிந்தவர் என்று குறிப்பிட்டார்.


    பிரதமர் மோடி ஜசோதா பென் என்பவரை இளம் வயதில் திருமணம் செய்திருந்தார். ஆனால், திருமணமான குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர்.

    மோடி திருமணம் ஆகாதவர் என்றே முதலில் கருதப்பட்டது. 2014 பாராளுமன்ற தேர்தலின் போது கூட வேட்பு மனுவில் ஜசோதா பென் தனது மனைவி என்று குறிப்பிட்டு இருந்தார்.

    ஆனால், ஆனந்தி பென் பட்டேல் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியவற்றை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். #PMModi
    ×