search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Javadekar"

    12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு முதல் நேரடியாக பி.எட் பட்டப்படிப்பில் சேரும் வகையில் தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. #MonsoonSession
    புதுடெல்லி:

    தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டு பி.எட் பட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்.

    பாராளுமன்றத்தில் இதன் மீதான இன்றைய விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார். 

    ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 
    கனடாவில் நடைபெறும் 17-வது உலக சமஸ்கிருத மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நாளை தொடங்கி வைக்கிறார்.
    புதுடெல்லி :

    கனடா நாட்டில் 17-வது உலக சமஸ்கிருத மாநாடு இம்மாதம் 9-ம் தேதி முதல் வரும் 13-ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைப்பார் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகெங்கிலும் 40 நாடுகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட சமஸ்கிருத அறிஞர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.



    வேத காலத்தில் பெண்களின் கல்வி, சமஸ்கிருத புத்தமத புத்தகங்கள், யாகசலாவிற்கு அப்பால் மிம்சா, பகவத புராண அறிமுகம் போன்றவை மாநாட்டில் உரையாற்ற உள்ள குறிப்பிடத்தக்க தலைப்புகள் ஆகும்.

    மந்திரி பிரகாஷ் ஜவடேகருடன் இந்தியாவை சேர்ந்த 10 சமஸ்கிருத அறிஞர்களும் மற்றும் இரண்டு அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    உலக மக்களிடையே சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் மற்றும்  பயிற்சி செய்யவும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக சமஸ்கிருத மாநாடு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    ×