என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jawa bike
நீங்கள் தேடியது "Jawa Bike"
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஜாவா பைக்குகளுக்கான காத்திருப்புக் காலம் ஒன்பது மாதங்களாக அதிகரித்துள்ளது. #jawamotorcycles
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய ஜாவா பைக்களின் காத்திருப்புக் காலம் ஒன்பது மாதங்களாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய ஜாவா பைக்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்துள்ளது.
புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவு இன்றுடன் (டிசம்பர் 25 ஆம் தேதி) நிறைவுபெறுகிறது. புதிய மோட்டார்சைக்கிள்களின் விநியோகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் துவங்குகிறது. இதன் அடுத்தக்கட்ட முன்பதிவு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் 100 விற்பனையகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 60 ஜாவா விற்பனையகங்கள் டிசம்பர் 2018க்குள் திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான தகவல்களின் படி 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களில் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. புதிய டூயல்-சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் கொண்ட ஜாவா மோட்டார்சைக்கிள்கள் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மாடல்களின் விலை சாதாரண மாடல்களை விட ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். சமீபத்தில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இரண்டு விற்பனையகங்கள் பூனேவின் பேனர் மற்றும் சின்ச்வாட் நகரங்களில் துவங்கப்பட்டது.
ஜாவா 42 மற்றும் ஜாவா என இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை முறையே ரூ.1.55 லட்சம் மற்றும் ரூ.1.64 லட்சம் விலையில் அறிமுகம் செய்தது. இரண்டு மோட்டார்சைக்கிள்களுடன் ஜாவா நிறுவனம் ஜாவா பெராக் என்ற மோட்டார்சைக்கிளை ரூ.1.89 லட்சம் விலையில் அறிமுகம் செய்தது.
புதிய ஜாவா 42 மாடலில் 293சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புது என்ஜின் பி.எஸ். VI ரக எமிஷன் கொண்டிருக்கிறது. ஜாவா பெராக் மாடலில் 334சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X