என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jayalalithaa death anniversary
நீங்கள் தேடியது "Jayalalithaa death anniversary"
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடம் நோக்கி முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. #Jayalalithaa #JayaMemorial #PeaceMarch
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை வாலாஜா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் மெரினா கடற்கரையில் நிறைவடைகிறது. பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இது தவிர ஏராளமான மக்களும் திரண்டுள்ளதால் மெரினா சாலை மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #Jayalalithaa #JayaMemorial #PeaceMarch

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் இன்று காலை வாலாஜா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் மெரினா கடற்கரையில் நிறைவடைகிறது. பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இது தவிர ஏராளமான மக்களும் திரண்டுள்ளதால் மெரினா சாலை மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #Jayalalithaa #JayaMemorial #PeaceMarch
×

X