என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jeep driver arrested"
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர், கம்பம், கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏல, தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வருகின்றனர்.
இவர்களை அழைத்து செல்வதற்காக ஜீப்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஜீப்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கம்பம் மெட்டு, கேரளா மோட்டார் வாகனதுறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு ஜீப் வந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜீப் டிரைவர் சிங்கராஜபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது24) என்பவரிடம் வாகன ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை சரிபார்த்தனர். அப்போது அது போலி லைசென்சு என தெரியவந்தது.
இது குறித்து உடும்பன்சோலை இணை வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுங்கண்டம் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் அமராவதி நகரைச் சேர்ந்த தங்கவேல் மனைவி சரணமணி (வயது 40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தங்கவேல் தனது மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். சரணமணி கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2 நாட்களாக சரணமணியை காணவில்லை என அவரது தங்கை கார்த்திகா செல்வி தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். நேற்று பூட்டி இருந்த அவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசவே போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் சரணமணி இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு பாகங்களில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் சரணமணி ஏலக்காய் தோட்டத்துக்கு திடீர் நகரைச் சேர்ந்த ஆண்டிச்சாமி (35) என்பவரது ஜீப்பில் சென்று வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. ஆண்டிச்சாமி அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சரணமணியை அடித்து கொன்று விட்டு வீட்டை பூட்டி விட்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் ஆண்டிச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்