search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jennings"

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றி இருப்பதை எதிரணி தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார். #ENGvIND #1000thTest
    பர்மிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோரூப் 80 ரன்னும், பேர்ஸ்டோவ் 70 ரன்னும், ஜென்னிஸ் 42 ரன்னும் எடுத்தனர்.

    நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 88 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்தது. சாம்குர்ரான் 27 ரன்னிலும், ஆன்டர்சன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    நேற்று முகமதுசமி ஓவரில் சாம்குர்ரான் அவுட் ஆக வேண்டியது. அவரது கேட்சை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவறவிட்டார்.

    இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது சமி 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இங்கிலாந்து ஆடுகளத்தில் முதல் நாளிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தி உள்ளார்.

    அஸ்வினை, இங்கிலாந்து தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-


    அஸ்வின் மிகவும் சிறந்த பவுலர். அவர் சரியான இடத்தில் பந்தை வீசினார். மேலும் வேகத்திலும் மாறுபாடு இருக்கும். பந்து நன்கு திரும்பும் ஆடுகளத்தில் நிறைய பந்துகள் விக்கெட்டை வீழ்த்தும் வகையில் இருக்கும். அதுபோன்ற பந்தில் அசிஸ்டயர் குக்கை போல்டு ஆக்கினார்.

    காலை வேளையில் இருந்து ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்தது. நாங்கள் 300 ரன்னுக்கு மேல் எடுப்போம் என்று கருதுகிறேன். அப்படி எடுத்துவிட்டால் எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான திசையில் நெருக்கடி கொடுப்பார்கள்.

    அதேவேளையில் இரு அணிகளும் பேட்டிங் செய்த பிறகுதான் எது நல்ல ஸ்கோர் என்பது தெரியும் என்றார். #ENGvIND #1000thTest #KeatonJennings #Ashwin
    லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணியில் இருந்து ஸ்டோன்மேன் நீக்கப்பட்டு ஜென்னிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

    2-வது டெஸ்ட் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டோன்மேன் நீக்கப்பட்டு ஜென்னிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. தாவித் மலன், 5. பேர்ஸ்டோவ், 6. பென் ஸ்டோக்ஸ், 7. ஜோஸ் பட்லர், 8. பெஸ், 9. மார்க் வுட், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன், 12. கிறிஸ் வோக்ஸ்.

    ஜென்னிங்ஸ் இந்தியாவிற்கு எதிராக மும்பையில் 2016-ல் நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் 6 போட்டியில் விளையாடி 294 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 24.50 ஆகும்.
    ×