search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewellery Shop Owner Arrested"

    சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் ரூ.1 3/4 கோடி பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MoneyCheating
    சென்னை:

    சென்னையில் ‘கே.எப்.ஜே.’ என்ற பெயரில் பிரபல நகைக்கடை உள்ளது. புரசை வாக்கம், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் கிளை கடைகள் உள்ளன. இதன் உரிமையாளராக சுனில் செரீன் உள்ளார்.

    இந்த நகைக் கடைக்கு சென்னையை சேர்ந்த விளம்பர நிறுவனம் ஒன்று விளம்பரங்கள் தயாரித்து கொடுத்து வந்தது.

    இதன்மூலம் விளம்பர நிறுவனத்துக்கு ரூ.1ž 3/4 கோடி வரை நகைக்கடை சார்பில் கட்டணம் கொடுக்க வேண்டி இருந்தது. இதனை அவர்கள் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதுபற்றி விளம்பர நிறுவனம் நகைக்கடை உரிமையாளரிடம் கேட்டபோது சரிவர பதில் கூறவில்லை. பாக்கி தொகையை கொடுப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து விளம்பர நிறுவனம் சார்பில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதில் கே.எப்.ஜே. நகைக்கடைக்கு விளம்பரம் செய்த வகையில் ரூ.1ž 3/4 கோடி பாக்கி உள்ளது. அதனை நகைக்கடை நிர்வாகத்தினர் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியபோது விளம்பர நிறுவனத்துக்கு ரூ.1ž 3/4 கோடி பாக்கி தொகையை கே.எப்.ஜே. நகைக்கடை உரிமையாளர் கொடுக்காமல் இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் சுனில் செரீனை போலீசார் கைது செய்தனர். பண மோசடி வழக்கில் நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MoneyCheating

    ×