என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jharkhand encounter
நீங்கள் தேடியது "Jharkhand encounter"
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற சண்டையில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள சின்ஜோ பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் மாநில போலீசை சேர்ந்த சிறப்புப்படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. அதோடு மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு சிறப்புப்படை போலீசார் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. கார்வா மற்றும் லேட்கார் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பாதுகாப்பு படையினர், கோப்ரா படையுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இந்த சண்டையில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து அங்கு சண்டை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

×

X