search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jio Bharat Phone"

    • ஜியோ 4ஜி ஃபீச்சர் போனுடன் ஜியோ பாரத் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • இந்த மொபைலில் ஜியோ சினிமா ஆப் கொண்டு நிகழ்ச்சிகள், திரைப்படங்களை பார்க்கலாம்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் போன் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்தது. இந்த பிரான்டிங்கில் ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் 4ஜி ஃபீச்சர் போன் மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க 250 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்களை சென்றடைய ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    ஜியோ பாரத் போன் ஸ்மார்ட் ஃபீச்சர் போன் ஆகும். இதில் இண்டர்நெட் பயன்படுத்துவதோடு, யுபிஐ பேமன்ட் மற்றும் ஜியோ பொழுதுபோக்கு செயலிகளை பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. ஜியோ 4ஜி ஃபீச்சர் போனுடன் ஜியோ பாரத் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டா உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

     

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய ஜியோ பாரத் போனின் விலை ரூ. 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 4ஜி ஸ்மார்ட்போன் ஃபீச்சர் போன் மாடல் ரெட் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ரிடெயில் தவிர இதர பிரான்டுகளும் ஜியோ பாரத் பிளாட்ஃபார்மில் இணைந்து ஜியோ பாரத் போன்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன. ஜியோ பாரத் போன்களின் முதல் பத்து லட்சம் யூனிட்களுக்கான பீட்டா டெஸ்டிங் ஜூலை 7-ம் தேதி துவங்க இருக்கிறது.

    ரிசார்ஜ் சலுகை விவரங்கள்:

    ரிலையன்ஸ் ஜியோ பாரத் சலுகைகளின் விலை ரூ. 123 முதல் துவங்குகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    ஜியோ பாரத் வருடாந்திர சலுகையின் விலை ரூ. 1234 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையிலும் பயனர்களுக்கு தினமும் 0.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    ஜியோ பாரத் போன் அம்சங்கள்:

    ஜியோ பாரத் போனின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தோற்றத்தில் இந்த போன் வழக்கமான ஃபீச்சர் போன்றே காட்சியளிக்கிறது. இதில் சிறிய ஸ்கிரீன், கீபோர்டு மற்றும் ஏராளமான ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன.

    இந்த மொபைல் கொண்டு யுபிஐ பேமன்ட் செய்ய முடியும். இதற்கு ஜியோ பே செயலியை பயன்படுத்த வேண்டும். இத்துடன் ஜியோ சினிமா ஆப் கொண்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.

    ஜியோ பாரத் போனுடன் ஜியோ சாவன் ஆப் சந்தா வழங்கப்படுகிறது. இதில் சுமார் எட்டு கோடிக்கும் அதிக பாடல்கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர எப்எம் ரேடியோ, டார்ச்லைட் போன்ற அம்சங்களும் உள்ளன.

    ×