என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jiorail app
நீங்கள் தேடியது "JioRail app"
ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #jiorail #Apps
இந்திய சந்தையில் ஜியோபோன் அதிக வெற்றி பெற்றிருக்கிறது. ஜியோவின் மலிவு விலை சலுகைகளே ஜியோபோன் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஜியோபோனை தொடர்ந்து ஜியோபோன் 2 சற்றே மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமானது.
ஜியோபோன் 2 மாடலில் க்வெர்டி கீபோர்டு கொண்டிருக்கும் நிலையில் வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், கை ஓ.எஸ். இயங்குதளம் அதிக பிரபலமாகி வருவதை தொடர்ந்து ஜியோ தனது ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கு ஜியோரெயில் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோஸ்டோரில் கிடைக்கும் புதிய ஜியோரெயில் ஆப் கொண்டு வாடிக்கையாளர்கள் ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதோடு, பி.என்.ஆர். விவரம் மற்றும் இதர சேவைகளை ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களில் பயன்படுத்த முடியும். மற்ற அம்சங்களை பொருத்தவரை ரெயில் நேரங்களை சரிபார்க்கவும், இருக்கை எண்ணிக்கை மற்றும் பல்வேறு வசதிகள் பயன்படுத்தலாம்.
இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. செயலியை போன்று ஜியோரெயில் செயலியிலும் தட்கல் முறையில் டிக்கெட்களை கடைசி நேரத்திலும் முன்பதிவு செய்யலாம். ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய கிரெடிட், டிபெட் போன்ற கார்டுகளும், இ-வாலெட் சேவைகளை பயன்படுத்தியும் பணம் செலுத்தலாம்.
தற்சமயம் இந்த அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், எதிர்கால அப்டேட்களில் பி.என்.ஆர். ஸ்டேட்டஸ் மாற்றும் வசதி, ரெயில் இருக்கும் இடம் மற்றும் உணவு வகைகளை முன்பதிவு செய்யும் வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. புதிய வசதி படிப்படியாக வழங்கப்படுகிறது. இதனால் ஜியோஸ்டோரில் இவை கிடைக்க சில காலம் ஆகும் என கூறப்படுகிறது.
ஜியோபோன் 2 மாடலில் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் பிராசஸர், 512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 2 எம்.பி. பிரைமரி கேமரா, 0.3 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. #jiorail #Apps
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X