search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jos Buttler"

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி கட்டத்தில் டோனியை மனதில் நினைத்து களத்தில் சாதித்ததாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். #MSDhoni #JosButtler
    மான்செஸ்டர்:

    மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 114 ரன்களுடன் ஊசலாடிய போதிலும் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் (110 ரன், 122 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) தனி வீரராக போராடி 48.3 ஓவர்களில் இலக்கை எட்ட வைத்தார்.



    நெருக்கடிக்கு மத்தியில் பொறுமையாக ஆடியது போன்று தெரிந்ததே என்று ஜோஸ் பட்லரிடம் நிருபர்கள் கேட்ட போது ‘விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் நான் பொறுமையை கடைபிடிக்க வேண்டி இருந்தது. நெருக்கடியை தணிக்க முயற்சித்தேன். அப்போது இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் டோனி எந்த மாதிரி சமாளிப்பார் என்பதை கற்பனை செய்து பார்த்தேன். அவர் பதற்றத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக ஆடியிருப்பார். அதைத் தான் நானும் களத்தில் செய்தேன்’ என்றார். #MSDhoni #JosButtler
    தற்போதைய நிலையில் டோனியை விட பட்லர்தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். #MSDhoni
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்கத்திலேயே அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜேசன் ராய் 1 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 12 ரன்னிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 20 ரன்னிலும், ஜோ ரூட் 1 ரன்னிலும், மோர்கன் டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

    இதனால் இங்கிலாந்து 114 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. ஜோஸ் பட்லர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடினார். அடில் ரஷித்தை ஒருபக்கம் வைத்துக் கொண்டு சிறப்பாக விளையாடினார். சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாமல், சதம் அடித்து கடைசி வரை நிலைத்து நின்று அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 122 பந்தில் 110 ரன்கள் சேர்த்தார்.

    அவரது பேட்டிங்கை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலியா கேப்டன், தற்போதைய நிலையில் டோனியை விட ஜோஸ் பட்லர்தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘‘பட்லர் சிறந்தவர். மிகவும் சிறந்தவர். தற்போதைய நிலையில் ஒயிட் பால் போட்டியில் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.

    அவருக்கு போட்டியாக தற்போது ஏராளமான போட்டியாளர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. எம்எஸ் டோனி மிகவும் சிறந்த வீரர். ஆனால், தற்போதைய நிலையில் பட்லர் முன்னிலையில் இருக்கிறார். ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டியில் தனது பலன் என்ன என்பதை புரிந்து வைத்திருக்கிறார்’’ என்றார்.
    சர்வதேச கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் பேட்டில் இருந்த தகாத வார்த்தை குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனம் செய்துள்ளனர். #JosButtler
    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள லீட்சில் சில தினங்களுக்கு முன்பு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 80 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவியதுடன், ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

    இந்த போட்டியின் போது ஜோஸ்பட்லர் பேட்டிங் செய்ததை டெலிவிஷனில் பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சி காத்து இருந்தது. அவரது பேட்டின் கைப்பிடி பகுதியில் ஆங்கிலத்தில் எழுதி இருந்த ஒரு வார்த்தை அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவரின் பேட்டில் இருந்த இந்த தகாத வார்த்தை குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனம் செய்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் ஜோஸ் பட்லரின் பேட்டில் இடம் பெற்று இருந்த வார்த்தை குறித்து அதிக கண்டனங்கள் எழுந்தன.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அனுமதி பெறாமல் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் யாரும் தங்களது சீருடை மற்றும் பேட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களில் எத்தகைய வாசகத்தையும் எழுதக்கூடாது என்பது வீரர்களின் நடத்தை விதிமுறையாகும். ஆனால் அந்த விதிமுறையை மீறி செயல்பட்டு இருப்பதால் ஜோஸ் பட்லர் பலத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் மீது ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த சர்ச்சை குறித்து ஜோஸ் பட்லரிடம் கருத்து கேட்ட போது, ‘விளையாடும் போது எனக்கு தானே உத்வேகம் அளிக்கவே இது மாதிரி எழுதினேன். மற்றபடி யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என்றார்.  #JosButtler
    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு ஐபிஎல் தொடரில் எனது சிறப்பான பங்களிப்பு முக்கிய காரணம் என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற, லீட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    லார்ட்ஸ் போட்டியில் 67 ரன்கள் அடித்திருந்த ஜோஸ் பட்லர், லீஸ்ட் போட்டியில் 80 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 2014-க்கு பின்னர் ஒரு முதல்தர சதம் கூட அடிக்காமல் இருந்த பட்லர் பாகிஸ்தான் தொடருக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்நிலையில், டெஸ்ட் அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்க ஐபிஎல் சீசன் முக்கிய காரணம் என பட்லர் தெரிவித்துள்ளார். ‘இரண்டு வாரங்கள் நான் பங்கேற்ற ஐபிஎல் அதிகமான தன்னம்பிக்கையை எனக்கு கொடுத்தது. அதிகமான ரசிகர்கள் மத்தியில் ஒரு வெளிநாட்டு வீரர் விளையாடும் போது ஏற்படும் அழுத்தத்தை எதிர்கொண்டேன். அது போன்ற சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொண்டேன்’ என பட்லர் கூறியுள்ளார்.

    வெளிநாட்டு வீரர்கள் தொடர் முழுவதும் கட்டாயம் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #IPL2018
    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி 4-வது இடம்பிடித்ததால் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.

    லீக் போட்டியின்போது கடைசி போட்டிக்கு முன் இங்கிலாந்து வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் தேசிய அணியில் விளையாடுவதற்காக சென்று விட்டனர். இதனால் கொல்கத்தா அணிக்கெதிரான எலிமினேட்டரில் இருவரும் கலந்து கொள்ளவில்லை.



    இந்த போட்டியில் இருவருக்கும் பதில் கிளாசன், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் அணியிடம் இடம்பிடித்தனர். இவர்களால் பெரிய அளிவில் சாதிக்க முடியவில்லை. இதனால் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.

    அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்கும்போது வீரர்கள் மற்றும் ஆலோசகர்கள் தொடர் முழுவதும் விளையாடுவார்களா? என்பதை பார்க்க வேண்டும். இல்லையெனில் அவர்களை ஏலத்தில் எடுக்கக்ககூடாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தானுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 24-ந்தேதி தொடங்கும் முதல் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் இடம்பிடித்துள்ளார். #ENGvPAK
    இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். இவர் இங்கிலாந்து அணிக்காக 18 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். கடைசியாக 2016-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக விளையாடினார். அதன்பின் சுமார் ஒன்றரை வருடங்களாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை.

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வரும் 24-ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோஸ் பட்லருக்கு இடம் கிடைத்துள்ளது.



    பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜோ ரூட், 2. ஜேம்ஸ் ஆண்டர்சன், 3. ஜானி பேர்ஸ்டோவ், 4. டாம்  பஸ், 5. ஸ்டூ்வர்ட் பிராட், 6. ஜாஸ் பட்லர், 7. அலஸ்டைர் குக், 8. தாவித் மலன், 9. பென் ஸ்டோக்ஸ், 10. மார்க் ஸ்டோன்மேன், 11. கிறிஸ் வோக்ஸ், 12. கிறிஸ் வுட்.

    27 வயதாகும் பட்லர் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கடைசி 6 போட்டியில் ஐந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் பட்லர் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசி வீரேந்தர் சேவாக் சாதனையை சமன் செய்துள்ளார்.#IPL2018 #MIvRR
    இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அதிரடி வீரரான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரில் அனைத்து போட்டிகளில் விளையாடினாலும் ஜோஸ் பட்லருக்கு பேட்டிங் செய்வதற்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்ததாலும், தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாததாலும் கடந்த 2-ந்தேதி நடைபெற்ற டெல்லி டேர்வில்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க பேட்ஸ்மேன் ஆக களம் இறக்கப்பட்டார்.

    இந்த போட்டியில் இருந்து ஜோஸ் பட்லருக்கு அதிர்ஷ்டம் பிறந்தது. 11-ந்தேதி நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியுடன் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார். டெல்லிக்கு எதிராக 67 ரன்னும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 51 ரன்னும், மீண்டும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 82 ரன்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 95 ரன்களும் அடித்தார்.



    இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து விராட் கோலி சாதனையை சமன் செய்தார். விராட் கோலி நான்கு முறை தொடர்ச்சியாக அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அவுட்டாகாமல் 95 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக ஐந்துமுறை அரைசதங்களுக்கு மேல் விளாசிய வீரர் என்ற சாதனையை வீரேந்தர் சேவாக் உடன் பகிர்ந்துள்ளார்.

    இவரது ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் தாக்குப்பிடித்து வருகிறது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 95 ரன்கள் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து விராட் கோலியின் சாதனையுடன் இணைந்துள்ளார் ஜோஸ் பட்லர். #IPL2018 #RRvCSK
    இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அதிரடி வீரரான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரில் அனைத்து போட்டிகளில் விளையாடினாலும் ஜோஸ் பட்லருக்கு பேட்டிங் செய்வதற்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்ததாலும், தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாததாலும் கடந்த 2-ந்தேதி நடைபெற்ற டெல்லி டேர்வில்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க பேட்ஸ்மேன் ஆக களம் இறக்கப்பட்டார்.



    இந்த போட்டியில் இருந்து ஜோஸ் பட்லருக்கு அதிர்ஷ்டம் பிறந்தது. நேற்றைய போட்டியுடன் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார். டெல்லிக்கு எதிராக 67 ரன்னும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 51 ரன்னும், மீண்டும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 82 ரன்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 95 ரன்களும் அடித்தார்.

    இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து விராட் கோலி சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி நான்கு முறை தொடர்ச்சியாக நான்கு முறை அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளார். சேவாக் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களுக்கு மேல் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
    ×