search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JothiMani MP"

    • ED,IT ரெய்டு செய்த 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதை நியூஸ் லாண்டரி அம்பலப்படுத்தியுள்ளது.
    • ஏற்கனவே பாஜகவுக்கு நன்கொடை வழங்கி வந்த 6 நிறுவனங்கள் ED,IT ரெய்டுக்கு பிறகு பாஜகவுக்கு அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளன.

    "ED,IT ரெய்டு செய்த 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதை நியூஸ் லாண்டரி அம்பலப்படுத்தியுள்ளது. பாஜகவின் ஊழல்கள் பலவகை. அதில் இது ஒரு புது வகை!" என நியூஸ் லாண்ட்ரி கட்டுரையை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்பி எம்.பி ஜோதிமணி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    2018-19 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கு இடையில், ED,IT ரெய்டு நடைபெற்ற 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் பாஜகவுக்கு 187.58 கோடியை வழங்கிய 23 நிறுவனங்கள், பாஜக ஆட்சிக்கு வந்த 2014 முதல் ED,IT ரெய்டு நடத்தப்பட்ட ஆண்டு வரை பாஜகவுக்கு எந்த நன்கொடையும் வழங்கப்படவில்லை என்று நியூஸ் லாண்ட்ரி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இவற்றில் குறைந்தது 4 நிறுவனங்களாவது ED,IT ரெய்டு நடத்தப்பட்ட 4 மாதங்களுக்குள் பாஜகவுக்கு 9.05 கோடி நன்கொடை அளித்துள்ளன. ஏற்கனவே பாஜகவுக்கு நன்கொடை வழங்கி வந்த 6 நிறுவனங்கள் ED,IT ரெய்டுக்கு பிறகு பாஜகவுக்கு அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளன.

    அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பாஜகவுக்கு நன்கொடை அளித்த 6 நிறுவனங்கள், எதாவது ஒரு ஆண்டில் நன்கொடை அளிக்க தவறிவிட்டால், அந்த ஆண்டே அந்நிறுவனங்களில் மீது ED,IT ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம் நடத்த வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
    கரூர்:

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இன்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

    இது குறித்து அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்குவதற்கான மத்திய அரசு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள முகாமில் கலந்து கொண்டு மருத்துவ சான்று பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

    கல்வி உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது, உதவி உபகரணங்கள் பெறுவது, சக்கர நாற்காலி, பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கரவண்டி, ஊன்றுகோல் கருவி, செயற்கை கால் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்தல் மற்றும் பிற உதவிகள் இந்த முகாமில் வழங்கப்படும்.

    கரூர் மாவட்டத்தில் இந்த முகாமை ஒவ்வொரு இடத்திலும் நடத்த வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தினேன். அவர் முகாம் நடத்த மறுத்து விட்டார். பிற மாவட்ட கலெக்டர்கள் இந்த முகாமை நடத்த ஒத்துழைப்பு தரும் நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் மறுத்து வருகிறார்.

    கரூர் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி உதவிகளை வழங்க வேண்டும். அதற்கான தேதியை வழங்கும் வகையில் இந்த போராட்டத்தை தொடர்வேன் என்றார்‌.
    ×