search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Judges Press Conference"

    சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா பற்றி மூத்த நீதிபதிகள் பகிரங்கமாக குறை கூறியது தவறு என முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் கூறினார்.
    புதுடெல்லி:

    நீதித்துறையின் சுதந்திரம் என்ற கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் கலந்துகொண்டு பேசும்போது கடந்த ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பற்றி பகிரங்கமாக குறை கூறியதை கண்டித்தார். அவர் கூறியதாவது:-

    மூத்த நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தது, தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டியது, நீதித்துறைக்கு இடையூறு ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்து விட்டது. இது தவறானது. இந்த சந்திப்பு ஊடகங்களும், அரசியல்வாதிகளும் நீதித்துறை பற்றி விவாதிப்பதற்கு காரணமாகி விட்டது. நாட்டு மக்களை நீதிபதிகள் ஊடகங்கள் மூலம் சந்தித்தது, அவர்களுக்கு எந்த வகையில் உதவியது?...

    என்னை பொறுத்தவரை நீதிபதிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளியில் இருந்து எந்த உதவியும் தேவையில்லை. அவர்களுக்கு உள்ளாகவே இதை தீர்த்துக்கொள்ளவேண்டும். நீதித்துறைக்கு வெளியே இருப்பவர்களின் வழிகாட்டுதல்களை அவர்கள் எதிர்பார்க்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் பணியில் இருந்து நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற நிலையில் இந்த கருத்தை முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    ×