என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » judicial remand
நீங்கள் தேடியது "judicial remand"
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். #ShehbazSharif #Pakistan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் (வயது 67), ஊழல் வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதல்-மந்திரி பதவியை வகித்த போது ஆஷியானா வீட்டு வசதி ஊழலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் (தேசிய பொறுப்புடைமை முகமை) குற்றம் சாட்டுகிறது.
இந்த வழக்கில் அவர் தொடர்ந்து போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார். இந்தக் காவல் முடிந்த நிலையில் நேற்று அவர் லாகூர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் வக்கீல் வாரிஸ் அலி ஜான்ஜூவா வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் அதை நீதிபதி சையத் நஜ்முல் ஹசன் நிராகரித்தார். ஷாபாஸ் ஷெரீப்பை வரும் 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் காட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக அவரது கைது நடவடிக்கைக்கு எதிராக அவரது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #ShehbazSharif #Pakistan

கோவாவிற்கு சுற்றுலா வந்த இடத்தில் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட புனே வாலிபர்கள் 9 பேரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GoaCourt #GoaTouristsRemand
பனாஜி:
மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் கோவாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வடக்கு கோவாவின் பாகா கடற்கரைக்கு வந்த அவர்கள், அங்கு அமர்ந்திருந்த 16 வயது பெண்ணை செல்போன்களில் படம் எடுத்துள்ளனர். இதனை அந்த பெண்ணின் அண்ணன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புனே வாலிபர்கள், அந்த சிறுவனை தாக்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரும், மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்குள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 சிறுவர்கள் தவிர மற்ற 9 பேரும் இன்று மபுசா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேரையும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். சிறுவர்கள் இரண்டு பேரும் பனாஜி அருகே உள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #GoaCourt #GoaTouristsRemand

×

X