என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » justice kirubakaran
நீங்கள் தேடியது "justice kirubakaran"
காவல் துறையினருக்கு கட்டாய வார விடுப்பு அவசியம் தேவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை :
காவல் துறையினருக்கு கட்டாய வார விடுப்பு வழங்குவது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் காவல் துறையினருக்கு வார விடுப்பு அவசியம் தேவை என அவர் மீண்டும் வலியுறுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
காவல் துறையினருக்கு கட்டாய வார விடுப்பு வழங்குவது குறித்து நீதிபதி கிருபாகரன் குறிப்பிட்டுள்ளதாவது :-
வாரவிடுப்பு நாட்களிலும் காவலர்கள் பணிக்கு அழைக்கப்படுகின்றனர். வாரவிடுப்பு நாட்களில் பணிக்கு வந்தால் படியாக வழங்கப்படும் ரூ.200 நிறுத்தப்படுமா ?
காவல் துறையினருக்கு வார விடுப்பு அவசியம் தேவை, விடுமுறை நாட்களை காவலர்கள் குடும்பத்தினருடன் செலவிட வேண்டும். காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக ஜூலை 19ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.
காவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காவல்துறையினர் காப்பாற்ற வேண்டும், குற்றவாளிகளுடன் கவல்துரையினர் கைகோர்க்க கூடாது.

வாகனங்களில் கட்சிக்கொடிகள் மற்றும் தலைவர்களின் படங்களை வைத்து செல்லும் வாகனங்களை போலீசாரால் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ? ஏன் என்றால் எந்த புற்றில் என்ன பாம்பு இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, கட்சி அடையாளங்களுடன் செல்லும் வாகனங்களையும் போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது எனவும் சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக அரசியல் குறித்து பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த வரவேற்பு போல தற்போது யாருக்கும் இல்லை. தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது
நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். ஒரு லட்சம் வாக்காளர்கள் கையெழுத்திட்டால் தான் அரசியல் கட்சியை பதிவு செய்ய வேண்டும் என தகுதி நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
×

X