என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "k Veeramani says"
தர்மபுரி:
திராவிடர் கழகத்தின் சார்பில் மணியம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டு பகுத்தறிவு சார்ந்த புத்தகங்கள் ஆய்வுரை மற்றும் வெளியீட்டு விழா தர்மபுரி பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பணநாயகத்தால் அதிக இடங்களை பெற்று உள்ளது. இந்த தேர்தலில் சாதி மற்றும் பணத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஜனநாயகத்தை பணநாயகமும், சாதி ஆதிக்கமும் ஆட்கொள்வதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இதற்கு தேர்தல் நடைமுறைகளில் உரிய சீர்திருத்தங்களையும், புதிய சட்டங்களையும் கொண்டு வருவது மிகவும் அவசியம். வாக்காளர்கள் பணம் பெறுவதை தடுக்க அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்ற சட்டத்தையும், தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அரசின் திட்டங்களில் சலுகைகள் கிடையாது என்ற விதிமுறையையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தவும், தமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலைநாட்டவும் தமிழகஅரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வரைவுதிட்டத்தில் எத்தகைய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியாத நிலையில் தமிழகத்திற்கு சாதகமான நிலை உள்ளது என்று அவசரப்பட்டு கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை தமிழகஅரசு எடுப்பது அவசரமும், அவசியமுமாகும். இதுதொடர்பாக தமிழகஅரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.