என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kaala audio launch
நீங்கள் தேடியது "Kaala Audio Launch"
நான் கண் மூடுவதற்குள் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று காலா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் தெரிவித்தார். #Kaala #KaalaAudioLaunch #Rajinikanth
ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும் போது,
இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. நான் கடைசியாக கொண்டாடிய வெற்றி விழா சிவாஜி தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த வெற்றி விழாவுக்கு வந்த கலைஞர் அன்று பேசினார். அவரது அந்த குரலை மறக்க முடியாது. அவரது குரலை மறுபடியும் கேட்க வேண்டும். 75 ஆண்டுகளாக ஒலித்த அந்த குரல், மீண்டும் ஒலிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். விரைவில் அவரது குரல் ஒலிக்கும் என்று நம்புகிறேன்.
சிவாஜிக்கு பின்னர் ரோபோ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பின்னர் உடல் நலம் மோசமானதால் படத்தின் வெற்றியை கொண்டாடவில்லை. பின்னர் ராணா படம் சரியாக போகவில்லை. புத்திசாலியுடன் பழகலாம். அதிபுத்திசாலியுடன் பழக கூடாது. அவர்களிடம் ஆலோசனை கேட்க கூடாது. நேரம் வரும் போது வழி, ஜன்னல், கதவு தெரியாமல் அவர்கள் ஓடி விடுவார்கள். பின்னர் லிங்கா பண்ணோம். அதுவும்சரியாக போகவில்லை.
அவ்வப்போது இமயமலைக்கு போவேன். அங்கே போவதே கங்கையை பார்க்கத்தான். தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் எனது கனவு. நான் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும்.
படத்திலும் சரி, வாழ்க்கையில் சரி நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது. இவ்வாறு தோல்விகள் தொடர்ந்தது. உடனே ரஜினி அவ்வுளோ தான். முடிஞ்சு போச்சுனு சொன்னாங்க. 40 வருசமாக சொல்றாங்க, அவர்களையும் தப்பு சொல்ல முடியாது. வயிறு எரியத்தான் செய்யும்.
யார் என்ன சொன்னாலும் என் வழியில் நான் போய்க் கொண்டே இருப்பேன். அந்த நிலையில், காலத்திற்கு ஏற்ப மாற நினைத்தேன். அப்போது சவுந்தர்யா ரஞ்சித்தை அறிமுகம் செய்தார். அவர் டான் கதையை சொன்னார். ஒரே பாட்ஷா தான். மலேசியா அன்டர்வேர்டு டான் என்று அவர் கதை சொன்னதால் கதையை கேட்க ஆரம்பித்தேன். அவரிடம் பேசும்போதே, அவரது குணாதிசயமே பிடித்தது. பிறகு கதையை கேட்டேன். ரஞ்சித் சந்தர்ப்பவாதி இல்லை. அவர்மேல் அவருக்கு நம்பிக்கை இருந்தது.
அந்த படம் வெற்றி பெற்றது. பினன்ர் வுண்டர்பார் தயாரிப்பில் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அது தற்போது நடந்தது. தனுஷ் தங்கப் பையன். அப்பா அம்மாவை மதிக்கிறார். மனைவியை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார். பின்னர் வெற்றிமாறன் ஒரு கதை சொன்னார், கதை எனக்கு பிடித்தது, அது முழு அரசியல் படம். நான் அப்போது அரசியலுக்கு வரவில்லை. எனவே அந்த படத்தில் நடிக்கவில்லை.
பின்னர் மறுபடியும் ரஞ்சித்தை அழைத்தேன். இருவரும் இணைந்தோம். காலா படம் உருவானது. காலா அரசியல் படம் கிடையாது. ஆனால் அரசியல் இருக்கும்.
அரசியல் பற்றிய பேச நேரம் வரவில்லை. நேரம் வரும் போது அரசியல் பற்றி பேசுகிறேன் என்றார். #Kaala #KaalaAudioLaunch #Rajinikanth
Kaala Audio Launch Kaala Rajinikanth Nana Patekar Huma Qureshi Anjali Patil Samuthirakani Sampath Santhosh Narayanan Dhanush Wunderbar Films Kasthuri rao Lyricist Vivek காலா பா.ரஞ்சித் காலா ரஜினிகாந்த் நானா படேகர் ஹூமா குரோஷி அஞ்சலி பாட்டீல் கஸ்தூரி ராவ் சமுத்திரக்கனி சம்பத் சந்தோஷ் நாராயணன் தனுஷ் காலா இசை வெளியீட்டு விழா
‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நந்தனத்தில் நடைபெற்று வரும் நிலையில், விழாவில் பங்கேற்றுள்ள ரஜினிகாந்த் காலா ஸ்டைலில் வந்து அசத்தியிருக்கிறார். #Kaala #Rajinikanth
ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா.இரஞ்சித், படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ரஜினி ரசிகர்கள் புடைசூழ கோலகலமாக தொடங்கிய காலா இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினிகாந்த் காலா படத்தில் தோன்றுவது போலவே முழுவதுமாக கருப்பு நிற உடை அணிந்து வந்துள்ளார். படத்தின் உருவாக்க வீடியோவுடன் இசை வெளியீட்டு துவங்கி நடைபெற்று வருகிறது.
பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படம் மும்பையை பின்னணியில் உருவாகி இருக்கிறது. தனுஷ் தனது வுண்டர்பார் பிலம்ஸ் மூலம் படத்தை தயாரித்துள்ளார்.
முன்னதாக படத்தின் பாடல்கள் இன்று காலையே அனைத்து விதமான டிஜிட்டல் தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Kaala #Rajinikanth #KaalaAudioLaunch
Kaala Audio Launch Kaala Rajinikanth Nana Patekar Huma Qureshi Anjali Patil Samuthirakani Sampath Santhosh Narayanan Dhanush Wunderbar Films Kasthuri rao Lyricist Vivek காலா பா.ரஞ்சித் காலா ரஜினிகாந்த் நானா படேகர் ஹூமா குரோஷி அஞ்சலி பாட்டீல் கஸ்தூரி ராவ் சமுத்திரக்கனி சம்பத் சந்தோஷ் நாராயணன் தனுஷ் காலா இசை வெளியீட்டு விழா
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X