என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kalaigambal"
- சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில்.
- காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக இருந்தது
சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்க கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது.
இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது.
பின்னர் 1640-ல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். இன்றும் அதே நிலை நீடிக்கிறது.
இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுதல் என்பது கற்பக விருட்சத்திற்கு வேண்டுவது மாதிரி என்கிறார் காளிதாஸ் சிவாச்சாரியார். ''ஒரு முறை வந்து அம்பாளை வழிபட்டாலே வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உணரமுடியும்.
கேட்ட வரம் கிடைப்பதால்தான் கடவுள் இல்லை என்று வெளியே சொல்கிறவர்களும் அம்பாளை வழிபடுகிறார்கள்.
அம்பாளை வேண்டுவதன் மூலம் திருமணத்தடை நீங்குகிறது. அதனால் நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளை வணங்கிவிட்டு அவள் பாதத்தில் வைத்து எடுத்த மஞ்சளை தினமும் வெறும் வயிற்றில் பச்சைத் தண்ணீரில் கலந்து உட்கொண்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது. அப்படி புத்திர பாக்கியம் பெற்றவர்கள் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்து வருகிறார்கள்'' என்கிறார்.
இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு கமடேஸ்வரர் என்று பெயர். இப்பெயர் வந்த வரலாறு ஒரு புராணச் செய்தியை உள்ளடக்கியது.
கைலையில் உமா, மகேஸ்வரன் இருவரில் அழகில் சிறந்தவர் யார் என்று சிவ பெருமான் தெரிந்துகொள்ள விரும்பினார்.
இக்கேள்விக்கு எந்த விடையை அளித்தாலும் அது இருவரில் ஒருவரை வருத்தப்படுத்தும் என்பதால் கேள்விக்கு விடையளிக்க ஒருவரும் முன்வரவில்லை.
அதற்கு அவர் தான் ஏற்படுத்தியுள்ள ஒரு தாமரைத் தடாகத்திற்கு சென்று அதன் எழிலைக் கண்டு வருமாறு பின்னர் விடையளிப்பதாகவும் கூறினார். பெருமானும் இறைவியுடன் சென்று பார்த்தபோது அந்த சூழல் தவம் மேற்கொள்ளத் தகுந்த இடமாக தோன்றவே சிவபெருமான் அங்கமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.
இறைவி எழில் மிக்க அந்த சூழலால் கவரப்பட்டு அங்குள்ள மலர்களாலும் மற்றும் பட்டுத் துகிலாலும் தன்னை மேலும் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டாள்.
இருவரும் புறப்பட்டு வரும் வழியில் பரப்ரம்மத்தால் சிருஷ்டிக்கப்பட்ட பெரியதொரு நிலைக்கண்ணாடியில் அவர்கள் தங்கள் உருவத்தை பார்க்க நேரிட்டது.
அதில் பாம்பணி, சுடலைப்பொடி, வெள்ளெருக்கு மாலை, புலித்தோல் என்றிந்த விதமான தன் தோற்றத்தைக் கண்டவுடன் பரப்ரும்மம் எவ்வளவு அழகாகத் தம்மை தர்மசங்கடத்தில் இருந்து விடுவித்துக் கொண்டார் என்பது புரிந்தது.
பரப்ரம்மம் நிலையில்லாத அழகின்மேல் ஆசை கொண்ட மனம் அருவுருவமாக `லிங்க' வடிவில் அமைவதாக என்று கூறினார்.
கமம் என்றால் நிறைவு (தொல்காப்பியம் கூறும் பொருள்) ஆன்மாக்களுடன் அருவருவாய் லிங்க வடிவில் கலந்திருக்கும் நிலை என்ற பொருளில் கமடேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.
உலக அளவில் பரபரப்பாக பேசப்படும் கோவில்களுள் ஒன்றாக தற்போது விளங்கி வருகிறது, திருவந்தபுரம் பத்ம சுவாமி கோவில். அதற்குக் காரணம் கோவிலில் இருக்கும் தங்கப் புதையலே ஆகும்.
இருப்பினும் பத்மநாப சுவாமியின் அளப்பெரிய சக்திக்கு அரசர்களால் கொடுக்கப்பட்ட காணிக்கை தான்இந்தப் பொன்னும் பொருளும் என்றால் அது மிகையாகாது. இந்த ஆலயத்தின் கருவறையில் முதலில் மூல விக்கிரகம் தான் இருந்து வந்தது. அது மரத்திலிருந்து தோன்றிய விக்கிரகம் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த விக்கிரகத்திற்கு தான் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
நிர்வாகப் பிரச்சினை காரணமாக 1673 -ம் ஆண்டு முதல் 1677 -ம் ஆண்டு வரை கோவிலில் பூஜை நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சினை நடைபெறுவதற்கு முந்தைய நாளில் பூட்டிய அறையில் இருந்து ஒரு பெரிய நாகப் பாம்பு வெளிப்பட்டதாகவும் அதுவே வரப்போகும் சம்பவத்திற்கு எச்சரிக்கையாக அமைந்ததாகவும் தெரிய வருகிறது.
அதன் பின்னர் 1678 -ம் ஆண்டு கோவில் நடை திறக்கப்பட்டு மீண்டும் பூஜைகள் வழக்கம் போல நடைபெற்றன. இதற்கு இடையே 1680-ம் ஆண்டு இறுதியில் ஆலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கோவில் கர்ப்பகிரகத்தின் மேற்கூரையில் தீ வேகமாக பரவி எரிந்தது.
இதில் இலுப்ப மரத்தால் செய்யப்பட்ட பத்மநாப சுவாமியின் மூல விக்கிரகத்தின் மீதும் தீ விழுந்தது. இதில் பெருமானின் இடது கையில் உள்ள மூன்று விரல்களும் இடது காலில் உள்ள விரல்கள் முழுவதும் தீக்கரையாகின. அதிர்ஷ்டவசமாக பெருமானின் திருமேனியும் மற்ற பாகங்களும் தீயிலிருந்து தப்பின.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்
திருவனந்தபுரம் ஆலயம் தீயில் சேதமடைந்ததைத் தொடர்ந்து 1729- ஆம் ஆண்டு விஷ்ணு பக்தரான ராஜா மார்த்தாண்ட வர்மா ஆலயத்தைப் புதுப்பித்து 30 மீட்டர் உயரம் கொண்ட ஏழுநிலை கோபுரத்தைக் கட்டினார். பின்னர் கருவறையில் புதிய விக்கிரத்தையும் பிரதிஷ்டை செய்தார்.
அதன்படி கோவிலில் பாம்பனையில் 18 அடி நீளத்தில் பத்மநாப சுவாமி பள்ளி கொண்டுள்ளது பான்ற அழகுமிக்க சிலை வடிவமைக்கப்பட்டது. நேபாளத்தில் கண்டகி நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட 12,000 சாலிக் கிராமம் கற்களால் பத்மநாப சுவாமி சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் மீது டு சர்க்கரா யோகம் என்ற ஆயுர்வேத ரசாயனமும் பூசப்பட்டுள்ளது. இதனால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. எனவே அருகில் திசனரி அபிஷேக பூஜைக்காக மற்றொரு தங்க விக்கிரகரத்தை வைத்துள்ளனர்.
மும்மூர்த்திகள்:- விக்கிரகத்திற்குள் சாலிக்கிராமங்களை நிரப்பி விட்டால் தனியாக சக்தி பிரதிஷ்டை செய்ய வேண்டாம் என்ற மரபு உள்ளது. 12 சாலிக்கிராமங்களை ஒரு சேர பூஜித்தால் ஒரு சேத்திரத்தின் கோவில் மகிமை வந்து சேரும் ஒர விக்கிரகத்தில் 120000 சாலிக் கிராமங்கள் அடங்கி இருப்பதால் ஆயிரம் மஹா சேடத்திரங்கள் மகிமை கொண்டதாகும்.
பத்மநாப சுவாமியை முழுமையாக தரிசிக்க வேண்டும் என்றால் மூன்று வாசல் வழியாகத்தான் பாரக்க் வேண்டும். முதல் வாசல் வழியாக பகவானின் தலையையும் மற்றும் அவரது கரங்கள் சிவலிங்கத்தின் மீது இருப்பதையும் தரிசிக்கிலாம்.
மகாலட்சுமி, திராகரமுனி, பகவானின் தொப்புளில் புறப்பட்ட தாமரையில் அமர்ந்துள்ள பிரம்மா, தினசரி அபிஷேகம் செய்யப்படும் தங்க விக்கிரகம் உற்சவ வேளையில் அருள் பாலிக்கும் வெள்ளி விக்கிரகம் ஆகியவற்றை, இரண்டாவது வாசல் வழியாகவும் பகவானின் பாதக் கமலத்தையும், கவுண்டியன் முனிவரையும் மூன்றாவது வாசல் வழியாகப் பார்த்து தரிசிக்கலாம்.
ஆதிசேஷனின் ஐந்து தலைகள் உள்முகமாக வளைந்துள்ளன. விஷ்ணுவின் வலது கரம் சிவலிங்கத்தின் மீது உள்ளது. பகவான் இரு தேவியருமான ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அருகில் நிற்கின்றனர்.
பகவான் விஷ்ணு இடது கரத்தில் தங்கியுள்ள தாமரை மலரின் நறுமணத்தை ஆதிசேஷன் நுகர்கின்றார். சிவன், பிரம்மா விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒரு சேர இங்கு அமைந்துள்ளதால்... சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாய் இந்த ஆலயம் விளங்கி வருகிறது.
பலராமம் தரிசித்த புனித தலம்:& பிரமாண்ட புராணமும் அனந்த சயன மகாத்மியமும், ஸ்ரீமத் பாகவதமும் இந்த பத்மநாப சுவாமி கோவில் பெருமையைப் பற்றி எடுத்துக் கூறுகின்றன. ஸ்ரீமத் பாகவதத்தில் அனந்தனின் அவதாரமான பலராமர் திரவனந்தபுரம் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி விஷ்ணுவை தரிசித்து விட்டு, பிராமணர்களுக்கு 10 ஆயிரம் பசுக்களை தானம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
கலியுகத்தின் முதல் கோவில்:& இந்தக் கோவில் கலியுகம் பிறந்த முதல் நாளில் அதாவது சுமார் 5000 வருடங்களுக்கு மன்பு ஏற்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. அதாவது குமரி மாவட்டம் திரவட்டாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவில் திரேதாயுகத்தில் கட்டப்பட்டது.
அந்த கோவில் கட்டப்பட்டு 1084 ஆண்டுகளுக்குப் பிறகு பத்மநாப சுவாமி கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதனால்தான் பத்மநாப சுவாமியின் மூத்த சகோதரர் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் என்றும் அடுத்த மூத்த சகோதரர் கேரளத்தில்உ ள்ள வர்க்கலை ஸ்ரீ ஜனார்த்தனன் சுவாமி என்றும் நம்பப் படுகிறது. 12 ஆழ்வார்கள் எழுதிய நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற நூலில் இந்த ஆலயத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழ் இலக்கியக்களான பதிற்றுப் பத்து, சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் கூட பத்மநாப சுவாமி கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
அதிசய நிகழ்வுகள்:- திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி பாற்காலில் அனந்தசயனத்தில் பள்ளி கொண்டிருப்பது பாற்கடலின் மேல் என்று நம்பப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த காலங்களில் சில அற்புத அதிசய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
1563 -ம் ஆண்டு ஆதித்ய வர்மா ஆட்சிக்காலத்தில் கோவில் முன் மண்டபத்தின் பால் வழிந்ததாகவும், அடுத்த ஆண்டு மண்டபத்தின் தெற்கு பாகத்தில் பால் வழிந்ததற்காகவும் மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து மண்டபத்திற்கு அருகே தரையில் பால் பொங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்