search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamalhaasan"

    கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் 22 இடங்களில் சென்சார் போர்டு கட், மியூட், காட்சி மாற்றம் ஆகிய இடங்களில் கை வைத்துள்ளது. #Vishwaroopam2
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. பின்னர் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டார்கள். இந்த வீடியோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    தற்போது இப்படத்திற்கு சென்சார் போர்டு அளித்த கட், மியூட், காட்சி மாற்றம் ஆகியவற்றின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் மொத்தம் 22 இடங்களில் சென்சார் போர்டு குழுவினர் கட், மியூட், காட்சி மாற்றங்கள் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan
    திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, விஜய் நடிப்பில் உருவாகி வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #KamalHaasan #Vijay #Sarkar
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். `சர்கார்' படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் அமெரிக்கா சென்றுள்ளதால் அவர் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. 



    மேலும் கருணாநிதி மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, `சர்கார்' படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டதாக படக்குழுவி அறிவித்துள்ளது. 

    முன்னதாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்தும் கண்ணீர் மல்க கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #KamalHaasan #Vijay #Sarkar

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன் பேசும் போது, இது நீண்ட சரித்திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல என்றார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #KamalHaasan
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இன்று காலை ராஜாஜி அரங்கத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது,

    ஒரு நீண்ட சரித்திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல இது, ஒரு கமா என்று தான் நினைக்க வேண்டும். உணர்வும், இந்த சூழலும் எனது குரலை இந்த நிலைக்கு உயர்த்த முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது. கலைத்துறையில் ஒரு கடைக்குட்டி நான். நாட்டுக்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் ஒரு பெரியவரை, குடும்பத்தின் தலைவரை இழந்தது போன்ற உணர்வு இருக்கிறது. 



    கலைத்துறையில் அவரது ரீங்காரம் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நன்றி சொல்லும் ஆயிரமாயிரம் நடிகர்களில் நானும் ஒருவன். அந்த தமிழை பார்த்து மேலே ஏறி வந்திருக்கின்றேன். அவரை வணங்க வந்திருக்கிறேன். அவருக்கு வணக்கமும், மரியாதையும் தொடரும். இவ்வாறு பேசினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #KamalHaasan

    கமல்ஹாசன் பேசிய வீடியோ: 

    ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருக்கும் ‘இந்தியன்-2’ படக்குழுவில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நயன்தாரா இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
    கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2' வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் மற்றும் மூன்று பாடல்களின் பாடல் வரி அடங்கிய வீடியோக்கள் ஏற்கனவே வெளியான நிலையில், அதன் சண்டைக் காட்சிகள் உருவான விதத்தை வீடியோவாக நேற்று வெளியிட்டனர். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

    அடுத்ததாக கமல், சங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன் தாராவும் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது.

    நயன்தாரா தென்இந்திய கதாநாயகர்களில் கமல்ஹாசனை தவிர மற்றவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இதற்கு சம்மதிப்பார் என்கிறார்கள். சமீபகாலமாக இந்தி நடிகர்களை தமிழில் முன்னணி கதாநாயகர்கள் தங்கள் படங்களில் வில்லனாக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் கமலும் அஜய்தேவ்கனை வில்லனாக்குகிறார்.



    லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன்-2 உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #Indian2 #KamalHaasan

    காங்கிரஸ் தலைமையிலான அணியில் இணைவதற்கு தான் சிக்னல் கொடுத்துள்ளதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளதற்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam #Congress
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரசுக்கு சாதகமான நிலையே நிலவுவதாகவும், காங்கிரஸ் தலைமையிலான அணியோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தினகரன் அணியினர் கருத்துக்களை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும் கூறியிருந்தார்.

    மேலும், நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் எனவும் தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், திருநாவுக்கரசர் பேட்டி குறித்து சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நான் சேர்வதாக திருநாவுக்கரசர் கூறினால் எப்படி சரியாக இருக்கும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது ஒரு செய்தி மட்டும்தான். நான் அதை கூறினால் தான் சிக்னல்’ என தெரிவித்தார்.
    காவேரி மருத்துவமனைக்கு இன்று வந்த கமல்ஹாசன், கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi #KamalHaasan
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார்.

    கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கமல்ஹாசன் உடல்நிலை விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாதாக முன்னாள் பிரதமர் தேவே கவுடாவும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை தொடர்பாக ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் விசாரித்தார். 
    `விஸ்வரூபம்-2' படத்துக்கு தடை விதிக்கக் கோரி பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan
    சென்னை:

    கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம்-2 திரைப்படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    கமல்ஹாசன் இயக்கிய நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் மூன்று வருட போராட்த்திற்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

    பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ‘மர்மயோகி’ என்ற திரைப்படத்தை இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் ரூ.100 கோடி செலவில் தயாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் நிறுவனத்துடன் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தர சம்மதம் தெரிவித்து இருந்தார். இதற்கு முன்பணமாக ரூ.4 கோடி கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.



    ஆனால், அந்த பணத்தை கொண்டு, மர்மயோகி படத்தை எடுக்கும் வேலைகள் எதையும் செய்யாமல், ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற திரைப்படத்தை எடுத்தார்.

    இதுதொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கமல்ஹாசன் தற்போது ‘விஸ்வரூபம்-2’ என்ற படத்தை தயாரித்து நடித்துள்ள வருகிற 10-ந் தேதி வெளியிடப்போவதாக தகவல் வெளியாக உள்ளது.

    எனவே, மர்மயோகி படத்துக்காக எங்களிடம் வாங்கிய ரூ.4 கோடியை, வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடி வழங்க கமல்ஹாசனுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். எனவே, விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



    இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கமல்ஹாசன் உள்பட பலருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த வழக்கின் விசாரணையை 6-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Vishwaroopam2 #KamalHaasan

    அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் கமல்ஹாசன், அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதை மனதில் வைத்தே இந்தியன்-2 படத்தில் நடிப்பதாக கூறினார். #Indian2 #KamalHaasan
    கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 வருகிற 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. 

    படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஐதராபாத்தில் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது. 

    இந்த நிலையில், அரசியல் சினிமா பற்றிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்து பேசினார். இந்தியன்-2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்று கேட்டபோது,

    ‘‘இந்தியன் படத்துக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பலவருடங்களுக்கு முன்பே நான் விரும்பினேன். அதை இயக்குனர் ‌ஷங்கரிடமும் வெளிப்படுத்தினேன். ஆனால் ‌ஷங்கருக்கு தயக்கம் இருந்தது. வெற்றி பெற்ற படத்தை எதற்காக மாற்றி எடுக்க வேண்டும் என்று யோசித்தார். 



    நான் அவரிடம், நீங்கள் இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்கவில்லை என்றால் அந்த தலைப்பை என்னிடம் தந்து விடுங்கள் நான் எடுக்கிறேன் என்று கூறினேன். அதன்பிறகு சமீப காலமாக அரசியல் சம்பந்தமாக நான் பதிவிடும் கருத்துக்களை பார்த்த பிறகு இந்தியன்-2 படத்தை எடுக்கலாம் என்று அவருக்கு எண்ணம் ஏற்பட்டது. 

    என்னுடையை அரசியல் பிரவேசம் என்ற புள்ளியில், இருவரும் ஒன்று சேர்ந்து இந்த படத்தை எடுக்க தயாராகி உள்ளோம். அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதை மனதில் வைத்தே இந்த படத்தில் நடிக்கிறேன்.’’

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #Indian2 #KamalHaasan

    கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என சாய்மீரா பட நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. #KamalHaasan #Vishwaroopam2
    சென்னை:

    நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. 

    கடந்த 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது. 

    அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஏற்கெனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தை தயாரிக்க கமல் பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும்.

    இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக நடிகர் கமல்ஹாசன் கொச்சைப்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Kamal #BiggBoss
    தனியார் தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், முதலாவது சீசன் அளவிற்கு, இந்த சீசனில் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். 

    ரசிகர்களை கவர பல சுவாரஸ்யமான விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில், போட்டியாளர்களில் ஒருவர் சர்வதிகாரி போல நடந்து கொள்ள வேண்டும். அந்த டாஸ்க்கில், "தமிழகத்தில் கடந்த காலங்களில் சர்வாதிகாரியால் என்ன நடந்தது தெரியாது" என சக போட்டியாளர் கூறுவதாக அமைந்துள்ளது.

    இதையடுத்து, இந்த டாஸ்க், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் விளம்பரத்திற்காக இதுபோன்று ஜெயலலிதாவை விமர்சனம் செய்வதாகவும், சென்னையைச் சேர்ந்த லூயிசாள் ரமேஷ் என்ற வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், ‘''நான் 27 ஆண்டுகாலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். தற்போது பலரும் அரசியல் கட்சி ஆரம்பித்து வருகின்றனர். ஆட்சியைப் பிடிக்க நாங்கள் இவ்வாறு செயல்படுவோம் என்பதற்குப் பதில் அவதூறு செய்வதுதான் அதிகமாக இருக்கிறது.

    பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் வாரந்தோறும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்க்க கட்சி சம்பந்தமாக நிகழ்ச்சியில் பேசுகிறார். ஆனால் இது அவரது கட்சியை வளர்க்க அவர் எடுத்துள்ள யுக்தி.

    ஆனால் அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக கொச்சைப்படுத்தி வருகிறார். தற்போது இவருடைய ஏற்பாட்டில் சர்வாதிகாரி என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஐஸ்வர்யா என்பவர் பெண் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் பொதுமக்களைக் கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களைச் செய்கிறார்.



    இந்த டாஸ்க்கில் என்னென்ன பேச வேண்டும், செய்ய வேண்டும் என கமல்ஹாசனும், தனியார் நிறுவனமும் முடிவு செய்கின்றனர். அதன்படிதான் அவர்கள் பேசுகின்றனர் நடிக்கின்றனர். இதில் ரித்விகா என்பவர் பேசும்போது ஐஸ்வர்யா வட மாநிலப் பெண் அவருக்கு தமிழ்நாட்டில் சர்வாதிகாரி ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாது என்று பேசுகிறார்.

    இந்த டாஸ்க் முடிந்தவுடன் வருகிற சனிக்கிழமை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்போது தமிழகத்தில் சர்வாதிகாரி போல் ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல் பேசுவார். எனவே தமிழகத்தில் அமைதிப் பூங்காவாக ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அவதூறாக சர்வாதிகாரி போல் சித்தரிக்கும் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிறுவனம் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
    இந்தியா எப்போதும் போல் பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். நான் சந்தர்ப்பவாதி அல்ல என கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    மும்பை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு பேட்டி அளித்தார்.

    அரசியலை தனது அடுத்தகட்ட பயணமாக நினைக்காமல், தான் வாழ்ந்ததை நிலைநாட்டுவதற்கான அத்தியாவசியத் தேவையாக கருதுவதாகவும், கடந்த 2000-ம் ஆண்டில் ‘ஹே ராம்’ படத்தை தயாரித்த காலகட்டத்தில் இந்த எண்ணம் தனக்குள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சினிமாவில் இருந்து அரசியல் பாதையை தேர்வு செய்த நிலைப்பாடு குறித்து பதிலளித்த அவர், 'நான் ஒரு கலைஞன்,  இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டுமா? என்று நான் முன்னர் எண்ணியதுண்டு. ஆனால், சமூகத்துக்கு தொண்டு செய்யும் தனிநபர் கடமையின் உந்துததலால் தற்போது இருக்கும் தேக்கநிலை மற்றும் ஊழலில் இருந்து தமிழ்நாட்டை மீட்கும் எனது முயற்சியின் ஒரேவழி அரசியலாகத்தான் இருந்தது’ என்றார்.

    எனக்கு மக்கள் மிகவும் முக்கியமானவர்கள். புகழின்போதும், சிக்கலான வேளைகளிலும் அவர்கள் என்னை ஆதரித்து வந்துள்ளனர். எனது வாழ்க்கையில் 63 ஆண்டுகாலம் என்னை மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த சமுதாயத்துக்கு எனது பங்களிப்பை தரவேண்டியது என் கடமையாகும். 

    வெறுமனே வாழ்ந்துவிட்டு செல்வதோடு போகாமல், நான் இதுவரை வாழ்ந்த வாழக்கைக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் இதை செய்யாவிட்டால் மகிழ்ச்சியான மனிதனாக எனது உயிர் பிரியாது என்பதால் மிகவும் முன்னுரிமைக்குரிய எனது  உடனடி அத்தியாவசியத் தேவையாக இந்த அரசியல் பயணத்தை கருதுகிறேன். 

    பொருத்தமான, உகந்த தருணத்தில் நான் அரசியலுக்கு வந்ததால் நான் சந்தர்ப்பவாதி என்று அர்த்தமல்ல, நான் சந்தர்ப்பவாதி அல்ல. எனக்கென்று ஒரு தொலைநோக்குப் பார்வை உண்டு. அதை எனக்குரிய திறனாலும், பலத்தாலும் நான் நிறைவேற்றுவேன். இந்தியாவை பன்முகத்தனமை கொண்ட நாடாகவே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் எனவும் கமல் தெரிவித்தார்.



    சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்த கமல் ஹாசன், அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல் ‘எதுவும் சாத்தியம்தான்’ என பதிலளித்தார்.

    தமிழ்நாட்டுக்கு எது சரியானது?, தற்போதைய நிலையை மாற்றி தமிழ்நாட்டுக்கு சிறந்தவற்றை செய்யக்கூடியவர்கள் யார்?, தமிழ்நாட்டை யார் சீரழித்தார்கள்?, யார் வெளியேற்றப்பட வேண்டும்? இதை செய்வதற்கு எனக்கு யார் உறுதுணையாக இருப்பார்கள்? இவை எல்லாம் மிகச் சாதாரணமான கேள்விகளாகும். இதற்கு நான் நேர்மையாக பதிலளித்தால் எனது கூட்டணியை நான் அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீங்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கலாம் என்னும் வதந்தி உலவுவகின்றதே? என்ற கேள்விக்கு  ‘எனது சித்தாந்தம் மற்றும் நிலைப்பாட்டில் நான் மிகத்தெளிவாக இருக்கிறேன்’ என தெரிவித்தார்.

    நடிகர் ரஜினிகாந்துடன் தன்னை ஒப்பிடுவது நியாயமல்ல என்று கூறிய கமல், ‘இது, ஜான் வெய்ன் - மர்லின் பிரான்டோ மற்றும் சார்லி சாப்லின் - ஜான் வெய்ன் ஆகியோருக்கு இடையிலான பொருத்தமற்ற ஒப்பீடு போன்றதாகும். இவர்கள் அனைவரும் அவரவர் பாணியில் உயர்வானவர்கள். ஆனால், வெவ்வேறு விதமானவர்கள். இப்படி யாரும் ஒப்பிடப்படுவதில்லை’ என சுட்டிக் காட்டினார்.

    சினிமாவில் அரசியல்வாதிகள் சித்தரிக்கப்படும் விதம்குறித்து பதிலளித்த அவர், ‘சினிமா இந்த சமூகத்தை பிரதிபலிக்கின்றது. அரசியலில் அதிகமான வில்லன்கள் உண்டு. ஆனால், எல்லோருமே வில்லன்கள் அல்ல. இதைதான் சினிமாக்காரர்கள் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் (அரசியல்வாதிகள்) மாறட்டுமே..’ என தெரிவித்த கமல் ஹாசன், விசாரணை வளையத்துக்குள் அரசியல்வாதிகளையும் கொண்டுவரும் லோக்பால் மசோதாதான் எனது கனவு என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
    லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ்வை நடிகை சுருதிஹாசன் காதலிப்பதாக செய்தி வந்த நிலையில், அவர்களது திருமணம் பற்றி சுருதி தான் முடிவு செய்ய வேண்டும் என்று கமல் கூறியுள்ளார். #KamalHaasan
    கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ்வை காதலிப்பதாக செய்தி வந்தது. அதை உறுதிபடுத்தும் வகையில் சுருதி நிகழ்ச்சிகளில் மைக்கேலுடன் கலந்துகொள்கிறார்.

    கமல் முன்பு கூட காதலருடன் வலம் வருகிறார். இது குறித்து கமலிடம் கேட்டபோது ‘என் மகள்களின் திருமணத்தை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். என் கல்யாணத்தையோ விவாகரத்தையோ என் அப்பா முடிவு செய்யவில்லை. அதுபோல அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிட்டேன். அவர்கள் சுயவிருப்பம் தான் எனக்கு முக்கியம்’ என்று பதில் அளித்தார். #KamalHaasan #ShrutiHaasan
    ×