என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kamalhaasan
நீங்கள் தேடியது "Kamalhaasan"
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க திருமாவளவன், ஜிகே வாசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கோபாலபுரம் இல்லம் வந்து ஸ்டாலினை சந்தித்தனர். #Karunanidhi #DMK #KamalHaasan
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.
வயோதிகம் காரணமாக அவர் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.
அவர்களை தொடர்ந்து, ஜிகே வாசன், திருமாவளவன், கே.பாலகிருஷ்னன் ஆகியோரும் கோபாலபுரம் வந்தனர். சிறிது நேரத்தில் கமல்ஹாசனும் அங்கு வந்து, ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து புறப்பட்டுச் சென்றார்.
கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் `விஸ்வரூபம்-2' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படமான `இந்தியன்-2' துவங்குவது பற்றி கமல் மனம்திறந்துள்ளார். #KamalHaasan #Indian2
கமல்ஹாசன் நடிப்பில் `விஸ்வரூபம்-2' ஆகஸ்ட் 10-ல் ரிலீசாக இருக்கிறது. `விஸ்வரூபம்-2' படத்தின் புரமோஷன் பணிகள் தற்போதுவிறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கமல் தற்போது, அவரது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாகி இருக்கிறார். இந்த நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல், `இந்தியன்-2' படம் குறித்து மனம்திறந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, தான் ஷங்கர் இயக்கும் `இந்தியன்-2' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் இறுதியில் முடிவடைவதால், அக்டோபரில் கமல் `இந்தியன்-2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் தற்போது `2.0' படத்தின் கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் பிசியாகி இருக்கிறார். `2.0' படம் நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. எனவே அக்டோபரில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்வது உறுதியாகி இருக்கிறது.
படப்பிடிப்பை சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்தில் வர்ம கலையால் ஊழல்வாதிகளை வீழ்த்தும், இந்தியன் தாத்தா கதாபாத்திரம் பேசப்பட்டது. அதே கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திலும் வருவதுபோல் இயக்குனர் ஷங்கர் திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
முழுமையான அரசியல் படமாக இது இருக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
அதேநேரத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள `சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பிலும் கமல் மீண்டும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. #KamalHaasan #Indian2
தமிழில் பல குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களை இயக்கியிருக்கும் கமல்ஹாசனின் சிஷ்யரும், இயக்குநருமான அம்ஜத் மீரான் அடுத்ததாக ஹாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். #AmjathMeeran
கமல்ஹாசனின் சிஷ்யரான அம்ஜத் மீரான் ஹாலிவுட் படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார். அம்ஜத் மீரான் ஏராளமான குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்கள் இயக்கியவர். அனிமேஷன் கலைஞர்.
இவர் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன், சசி, பரத்பாலா உள்ளிட்ட பலரிடம் பணிபுரிந்தவர். இவர் பிரேசில் என்னும் ஆங்கில படத்தை இயக்கி வருகிறார். சென்னை மற்றும் உலகின் பல பகுதிகளில் உருவாகும் இந்த படத்தில் பிரபல ஆங்கில நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு உலக அளவில் முன்னணியில் இருக்கும் 3 கிராபிக்ஸ் நிறுவனங்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தெருவில் இருந்து மைதானத்திற்கு செல்லும் கதையாக கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. #AmjathMeeran
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அரசியல் வசனங்களை பேசி மக்களை கவர்ந்தார். #KamalHaasan #BiggBossTamil2
கமல் அரசியலுக்கு வந்த பிறகு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அரசியல் பேசுகிறார். நேற்று முன் தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் “பொதுமக்கள்தான் மெஜாரிட்டி. நீங்க பொறுப்புல வெச்சவங்கதான் மைனாரிட்டி. ‘மைனாரிட்டி போடற ஆட்டத்தைப் பார்த்து பொதுமக்களும் ஆட்டம் போட்டாங்கன்னா விளையாட்டு கெட்டுப் போயிடும்.
‘இதையெல்லாம் பார்த்து மனம் நொந்து ஒதுங்கியிருந்தாலும் விளையாட்டு கெட்டுப் போயிடும்’ என்று உள்ளே நுழைந்தவுடனேயே அரசியல் நையாண்டியுடன் பேசத் துவங்கினார் கமல்.
முன்னாள் தலைவர்கள் கூடி ‘தகுதியற்ற தலைவர்’ என்கிற பரிசை ரம்யாவிற்கு தந்தார்கள். “இப்படித்தான்.. தலைவர்கள் தப்பு பண்ணும் போது.. அவங்களுக்கு பளிச்சுன்னு பரிசு தந்துடணும்’ என்று அரசியல் பொடியை நைசாக தூவினார் கமல். #KamalHaasan #BiggBossTamil2
கமலை போலி பகுத்தறிவாளன் என்று கூறிய பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசைக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பதிலளித்துள்ளார். #Kamal #Kamalhaasan
பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் கமல்ஹாசன் அமாவாசை நாளில் கட்சியை ஆரம்பிக்கிறார். அமாவாசை நாளில் கொடியேற்றுகிறார். ஆனால் “மய்யம்” என்ற பெயரில் கட்சியையும் ஆரம்பித்து பகுத்தறிவு பேசுகிறார். அப்படி பேசி போலி வேஷம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறும்போது, ‘ஒரே நேரத்தில் சட்ட மன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தக் கூடாது. லோக் ஆயுக்தா சட்டம் நீர்த்து போன நிலையில் உள்ளது.
என்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது. நான் பகுத்தறிவாளன். ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல. ஆழ்வார் பேட்டை ஆண்டவா என தொண்டர்கள் அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன்’ என்றார்.
விவேகம் படத்திற்கு பிறகு அக்ஷரா ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் நாசர் மகன் அபி மெக்தி ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vikram #AksharaHaasan #AbiMehedhi
கமல்ஹாசன், திரிஷா நடித்த `தூங்காவனம்' படத்தை இயக்கியவர் ராஜேஷ் செல்வா. இவர் அடுத்ததாக விக்ரம், அக்ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், இந்தப் படத்தில் நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுவே அபி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அபியின் சகோதரர் லுத்புதீன் ஏற்கனவே சைவம், பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அபி ஏற்றுள்ள இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் நிதினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆக்ஷன் மற்றும் எமோஷனல் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் ஆரம்பமாக உள்ளன.
அக்ஷராஹாசனுக்கு ஜோடியாக அபிமெக்தி நடிப்பதாக தகவல் வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். #Vikram #AksharaHaasan #AbiMehedhi
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் செய்யும் தவறுகளை பெண்களும் செய்ய நினைக்க வேண்டாம் என்று பெண்களுக்கு கமல் அறிவுரை வழங்கினார். #BiggBossTamil2 #KamalHaasan
பிக்பாஸ் நிகழ்ச்சி மேற்கத்திய நாடுகளிலும் வட இந்தியாவிலும் பிரபலமான நிகழ்ச்சி. குறிப்பிட்ட பிரபலங்களை 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கவைத்து அவர்கள் நடந்து கொள்வதை அப்படியே படம் பிடித்து காட்டும் நிகழ்ச்சி இது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தில் ஆரவ், ஓவியா காதல், ஜூலியின் நாடகம், ஓவியா தற்கொலை முயற்சி, காயத்ரி ரகுராமின் கெட்டவார்த்தை இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா நெருக்கம், ஒரே படுக்கையில் ஆணும் பெண்ணும் என வேறு பாதையில் செல்கிறது.
இதை எல்லாம் கமல் நேர்த்தியாக சமாளித்து வருகிறார். யாரும் மனம் கோணாதபடி அதே நேரத்தில் அவர்களது தவறை உணரும் வகையில் அவர்களுக்கு புரிய வைக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கப் போகும் நேரத்தில் பெண்களின் படுக்கை அறையில் மகத் படுத்துக்கொண்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்தது குறித்து பொன்னம்பலம் பலத்த ஆட்சேபனை எழுப்பினார்.
மகத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யா கூட்டணி செய்யும் சில விஷயங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. ‘‘இங்கு எல்லை மீறிய சில விஷயங்கள் நடக்கின்றன. அது தொடரக் கூடாது. தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் காக்கப்பட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் பார்க்கிற நிகழ்ச்சி இது. தப்பாகிடக் கூடாது” என்றார்.
“நான் பேச வேண்டும் என்று நினைத்ததை நீங்கள் பேசிவிட்டீர்கள்” என்று பொன்னம்பலத்தின் கருத்தை ஆதரித்தார்.
இந்த நிகழ்ச்சியின் தரம் குறித்த பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கு என்று அனந்த் வைத்தியநாதன் கூறியபோது கமல் அதை வழிமொழிந்தார்.
பொன்னம்பலம் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சிறைக்கு தள்ளினார்கள். அப்போது கமல் கூறியதாவது:-
“பொன்னம்பலம் - அனந்த் ஆகிய இரண்டு பேருக்குமே இந்த வீட்டின் மீது அக்கறையுள்ளது. பொன்னம்பலம் ‘அப்பா’ வாக இருந்து கண்டித்தார். அனந்த் ‘தாத்தா’வாக இருந்து செல்லம் கொடுத்தார். பொன்னம்பலம் விழிப்பாக இருந்து கவனித்த சில விஷயங்களை தூங்கிவிட்டதால் அனந்த் கவனிக்கவில்லை. ஆணுக்குச் சமமாக வர வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆண் செய்யும் தவறுகளையெல்லாம் பெண்கள் செய்யக் கூடாது. ஆண்களை விடவும் சிறப்பான காரியங்களை செய்து அவர்களை ஜெயித்துக் காட்டணும்.
நீங்கள் இன்னமும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறேன். இதை அறிவுரை, ஆலோசனை, டிப்ஸ்’ என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் இந்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சினிமாவில் நான் அப்படித்தான் பயன்படுத்திக்கிட்டேன். ஆரம்பத்துல என்னை யாரும் கவனிக்கவேயில்லை. பாலசந்தர் கண்களில் படும்படியாகச் சில காரியங்களைச் செய்தேன். புகழ்பெற்றேன். நீங்கள் நீங்களாக இருங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்’.
இவ்வாறு அவர் கூறினார். #BiggBossTamil2 #KamalHaasan
சாதியில்லாமல் என் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன் என்று கமல்ஹாசன் கூறியிந்த நிலையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் இருப்பது குறித்து கமல் விளக்கியுள்ளார். #KamalHaasan
நடிகர் கமல்ஹாசன் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கேள்வி ‘விஸ்வரூபம்’ வெளியீட்டின்போது படத்தை ‘டிடிஎச்’சில் வெளியிடுவேன் என்றீர்கள். அதற்கு எதிர்ப்புகள் வந்தன. அந்தப் பிரச்னைகளின் நினைவுகள் இப்பவும் துரத்துகிறதா?
பதில் இப்போது முன்னைவிடத் தெம்பாகவும் புரிந்தநிலையிலும் இருக்கிறேன். அது அரசியல் இடையூறுதான். யாரோ செய்யும் தொழிலில் நான் புகுந்துவிட்டதாக நினைத்து விட்டார்கள். நியாயமான வருமானம் வேண்டுமென்றால் தியேட்டர்களின் எண்ணிக்கை கூடவேண்டும். ஆந்திராவில் எல்லாம் அப்படித்தான். ஆனால் கள்ள மார்க்கெட் அது இது என்று சலவை செய்யும் இடமாகத் தமிழ் சினிமா இருப்பதை நான் விரும்பவில்லை.
கேள்வி:- உங்கள் தொலை நோக்குப் பார்வையை உங்கள் துறைசார்ந்தவர்களே புரிந்துகொள்ளாதபோது எப்படி உணர்வீர்கள்?”
பதில்:- மாற்றங்கள் மெதுவாகத்தான் நடக்கும். எதிரில் இருப்பவனை மனிதனாகப் பார்க்காமல் இரையாகப் பார்த்த காலம் மாற எத்தனை லட்சம் வருடங்கள் கடந்தன? ‘சாதிகள் இல்லையடி பாப்பா’னு சொல்ல நன்றாக இருக்கிறது. ஆனால் மாற்ற முயற்சி பண்ணினால் ‘உங்க வீட்ல என்ன பண்றீங்க?’னு கேட்கிறார்கள். நான் எதற்கும் முன்னுதாரணமா இருக்கிறதைத்தான் விரும்புகிறேன். நீ பண்ணுனு சொல்ல மாட்டேன். நான் பண்றேன்னு பண்ணிக்காட்டுவேன். எல்லாரும் அதைப் புரிஞ்சு கூடவர தாமதம் ஆகத்தான் செய்யும்.”
கே:- ரசிகர்கள் சினிமாவையும் அரசியலாகப் பார்ப்பது குறித்து?
ப:- அண்ணாவின் ‘வேலைக்காரி’யில இருந்து, கலைஞரின் ‘பராசக்தி’யில இருந்து அப்படித்தானே. இப்போது இன்னும் அதிகமாகியிருக்கு. அது எனக்குப் பிடித்திருக்கிறது. எல்லாரும் கேள்வி கேட்கறாங்க. இந்த ‘எல்லாரும் விழித் திருத்தல்’தான் நான் எதிர்பார்த்தது.
கே:- விஸ்வரூபம் 2 டிரெய்லர்ல தமிழ்ல வசனம் மாற்றியது எதிர்ப்புகளைத் தவிர்க்கவா?
ப:- அப்படியெல்லாம் இல்லை. படம் பார்த்தா உங்களுக்குப் புரியும். தவிரவும் நம்ம வாக்கியத்தொடர் வேற. இந்தியில் வேற. அதுக்காகச் சில வசனங்கள் மாறலாம். அதுபோக டிரெய்லர்ல மிகக்குறைந்த நேரம்தானே. அதையெல்லாம் பெரிசு படுத்துவாங்கனு நினைக்கவில்லை. சோஷியல் மீடியா காலமில்லையா; அதான் சர்ச்சை ஆயிடுச்சு. ஆனால், நான் இதைவிட காட்டமாக அரசியல் பேசியிருக்கிறேன்; எழுதியும் இருக்கிறேன்.
கே:- சபாஷ் நாயுடு எந்த நிலையில் இருக்கு? ‘சாதியில்லாமல் என் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன்’ என்று சொல்லும் உங்கள் படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் இருக்கே?”
ப:- 40 சதவீதம் முடிஞ்சது. டைட்டிலை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எம்.ஆர்.ராதா சாதிக்கெதிரா அத்தனை பேசினவர். ஆனால் சாதிப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு தான் வசனமே வைப்பார். பேர் வெச்சதாலேயே அதைக் கொண்டாடறதா அர்த்தமில்லை.
கே:- உங்க அரசியல் வருகை எப்படி திடீர்னு நடந்தது?”
ப:- எனக்கு சினிமா தான் எல்லாம்னு நினைச்சுட்டிருந்தேன். நான் சினிமாவில் நினைச்சதெல்லாம் செய்ய முடியலைங்கறது உண்மை. ஏன்னு யோசிச்சேன். அஸ்திவாரமே சரியா போடாம, சிகையலங்காரம் பண்ணிட்டிருக்கோம்னு தோணிச்சு. நான் அரசியலுக்கு வர்றது ‘ஹேராம்’லயே ஆரம்பிச்சது. ஆபத்து வருது, ஆபத்து வருதுன்னு ஒரு கட்டியம் கூறுதல் அதுல நடந்திருக்கும். அதுதான் இப்ப நடந்துட்டிருக்கு. நாடெங்கிலும் ஸ்ரீராம் அய்யங்கர்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனையோ சாகேத்ராம்கள் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #KamalHaasan #Vishwaroopam2 #SabashNaidu
‘உன்னைக் காணாது’ என்ற பாடலை பாடி அனைவரையும் கவர்ந்து டிரெண்டிங் ஆன கூலித்தொழிலாளி ராகேஷ் உன்னி கமல்ஹாசனை சந்தித்து அவர் முன்னிலையிலும் பாடி அசத்தியுள்ளார். #ShankarMahadevan #RakeshUnni #Kamalhaasan
விஸ்வரூபம் படத்தில் ஜிப்ரான் இசையில் பாடகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து கமல் பாடியிருந்த ‘உன்னைக் காணாது’ என்ற பாடலை தோட்டத்தில் அமர்ந்து கொண்டு சாதாரணமாக ஒருவர் பாடும் வீடியோ சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலானது.
வைரலான இந்த வீடியோ ஷங்கர் மகாதேவன் கவனத்துக்கும் சென்றுள்ளது. அதனைத் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஷங்கர் மகாதேவன் “இதைக் கேட்கும்போது, இந்த நாட்டின் மீது பெருமையாக உள்ளது. கலாச்சாரத்தில் மிகவும் வலிமையாக இருப்பதுடன் இதுபோன்ற பல திறமைகளையும் கொண்டுள்ளது. யார் இவர்? இவரை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? இது குறித்து எனக்கு உதவி தேவை. இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம்” என்று பதிவிட்டிருந்தார்.
அந்த காந்தக்குரலோன் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த ராகேஷ் உன்னி என்பது தெரியவந்தது. ரப்பர் தோட்டத்தில் கூலித்தொழில் செய்யும் உன்னி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த பாடலை பாடியதாக கூறியுள்ளார். இந்நிலையில், ராகேஷ் உன்னி மக்கள் நீதி மய்யம் தலௌவர் கமல்ஹாசனை இன்று சந்தித்துள்ளார்.
அவர் முன்னிலையிலும் தனது குரல் வித்தையை ராகேஷ் உன்னி காட்ட, கமல்ஹாசன் நெகிழ்ந்து போனார். #Vishwaroopam #ShankarMahadevan
கமல்ஹாசன் முன்னிலையில் தனது திறமையை ராகேஷ் உன்னி வெளிப்படுத்திய காட்சியை காண..
தனது மகள்களை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதியை குறிப்பிடவில்லை என கமல்ஹாசன் ட்வீட் செய்திருந்தற்கு, அவரது மகள் ஸ்ருதியின் பழைய பேட்டி ஒன்றை முன்வைத்து நெட்டிசன்கள் கமலை விமர்சித்து வருகின்றனர். #KamalHaasan #ShrutiHaasan
சென்னை:
இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய ஜாதியை குறிப்பிட்டு, நான் அந்த ஜாதியை சேர்ந்தவள் என பேசியிருப்பார். இந்த வீடியோவை பதிவிட்டு பலர் கமல்ஹாசனை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.
‘பள்ளி விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுப்பது ஜாதியை ஒழிக்காது. ஜாதியை தெரியாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும்’ என பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனது ஜாதியை பெருமையாக உங்களது மகள் குறிப்பிடுகிறார். இது எப்படி ஜாதியை ஒழிக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உங்களை மிகவும் பாதித்த நூல் எது? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் ‘பூணூல்’ என பதிலளித்திருந்தார். இந்த பதிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விக்கு பதிலளித்து ட்வீட் செய்தார். சாதியை ஒழிக்க என்ன யோசனையை முன்னெடுக்கின்றீர்கள்? என ஒருவர் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்து ட்வீட் செய்த அவர், “எனது இரு மகள்களையும் பள்ளியில் சேர்க்கும் போது அவர்களுக்கான விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுத்தேன். அடுத்த தலைமுறைக்கு ஜாதியை எடுத்துச் செல்லாமல் தவிர்க்க இதுவே வழி. அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய ஜாதியை குறிப்பிட்டு, நான் அந்த ஜாதியை சேர்ந்தவள் என பேசியிருப்பார். இந்த வீடியோவை பதிவிட்டு பலர் கமல்ஹாசனை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.
‘பள்ளி விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுப்பது ஜாதியை ஒழிக்காது. ஜாதியை தெரியாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும்’ என பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனது ஜாதியை பெருமையாக உங்களது மகள் குறிப்பிடுகிறார். இது எப்படி ஜாதியை ஒழிக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உங்களை மிகவும் பாதித்த நூல் எது? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் ‘பூணூல்’ என பதிலளித்திருந்தார். இந்த பதிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் அவரது காதலரை பிரிந்துவிட்டதாக சில தகவல்கள் வெளியான நிலையில், சுருதி, அவரது காதலர் என இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். #Vishwaroopam2 #ShrutiHaasan
கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பக்கம் அரசியலிலும் இன்னொரு பக்கம் பிக்பாஸ் டிவி நிகழ்ச்சி, விஸ்வரூபம் 2 படத்தின் வெளியீடு, சபாஷ் நாயுடு, இந்தியன் 2 படங்கள் என சினிமாவிலும் கால் ஊன்றியபடியே உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தில் இடம்பெற்ற ‘ஞாபகம் வருகிறதா' பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவர் சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு செல்ல வேண்டாம் என்று கமலிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதில் அளித்து கமல் நான் சினிமாவை விட்டு விலகி போகமாட்டேன். நடித்தால்தான் சினிமாவா? உங்களில் ‘ஒருவனாக’ அமர்ந்து சினிமாவை பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அதை விடவும் ஒரு பெரிய பணியில் ஈடுபட விரும்புகிறேன்.
எனக்குப் பிறகு நிறைய கலைஞர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழிவிடுவது தான் முதிர்ச்சி. என் முன்னோர்கள் அப்படித் தான் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது தியாகம் எல்லாம் இல்லை. “என் சீட்ல உக்காருன்னு” உத்தமவில்லன் படத்துல வர்ற காட்சியை பாலச்சந்தர்தான் எழுதினார். மறுபடியும் மறுபடியும் சினிமாவில் நடிக்கக் கேட்டு என்னை சஞ்சலப்படுத்தி விடாதீர்கள்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விஸ்வரூபம் 2 பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சுருதிஹாசனின் காதலர் மைக்கேலும் கலந்துகொண்டார். சுருதிஹாசனும் லண்டனை சேர்ந்த நடிகரான மைக்கேல் கார்சலும் காதலித்து வருவதாகவும், அவர்கள் காதலுக்கு கமல்ஹாசன் சரிகா இருவருமே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் செய்தி வந்தது. இடையில் இருவரும் பிரிந்ததாகவும் தகவல் வந்தது.
இந்தநிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பாடல் வெளியீட்டில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஸ்ருதிஹாசன் மேடையில் பாடியதை மைக்கேல் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார். #Vishwaroopam2 #BiggBoss2 #ShrutiHaasan
விஜய்யை அரசியல் களத்திற்கு அழைப்பதாக ட்விட்டரில் கூறிய கமல்ஹாசனுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KamalHaasan #Vijay #VijayPolitics
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக டுவிட்டர் மூலம் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?’ என்கிற கேள்விக்கு பதில் அளித்த கமல் ’எனது அனைத்துத் தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்தமான தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறினார்.
இது அரசியல் அரங்கில் பரபரப்பான பேச்சாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் செல்போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செல்போன் குறுந்தகவல் மூலமாகவும் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ள விஜய் ‘தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாராம்.
கமல், ரஜினிக்கு அடுத்தபடியாக அரசியலில் விஜய் களமிறங்குவார் என ஒரு யூகம் கிளம்பியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் வருகைக்கு அடித்தளம் போட்டார் விஜய். ஆனால் சில அரசியல் நிர்ப்பந்தங்களால் அவர் நடிக்கும் படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த முடிவை தள்ளிவைத்தார்.
கடந்த ஆண்டு வெளியான மெர்சல் படத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக சில வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதுபற்றி கூறும்போது, அந்த வசனம் சர்ச்சையாகும் என்று தெரிந்தே பேசியதாக குறிப்பிட்டார்.
அவர் நடித்துக் கொண்டிருக்கும் சர்கார் படத்திலும் நடப்பு அரசியலை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ள விஜய் கிடைக்கும் வரவேற்பை வைத்து அடுத்த கட்ட முடிவை எடுக்கலாம் என காத்திருக்கிறார்.
இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவை பெற விஜய்யை தன் பக்கம் இழுக்க கமல் முயற்சிக்கிறாரோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதன்மூலம் அரசியலில் கமலும், விஜய்யும் இணைந்து பயணிப்பார்களா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. #KamalHaasan #Vijay #VijayPolitics
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X